Chicken Butter Curry | Allergy File Pic (Photo Credit: Pixabay)

மார்ச் 09, இலண்டன் (World News): இங்கிலாந்து நாட்டில் உள்ள கிரேட்டர் மான்செஸ்டர், பூரி பகுதியை சேர்ந்தவர் ஜோசப் கிகின்சன் (வயது 27). இவர் கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில், ஆசையாக வாங்கிய பட்டர் சிக்கன் (Chicken Butter Curry) குழம்பை ருசிக்கருசிக்க அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு இருக்கிறார். அங்கு பிரத்தியேகமாக செய்து வழங்கப்படும் பட்டர் சிக்கன் குழம்பில் பாதாம் உட்பட பிற பொருட்களும் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது. Rameswaram Cafe Reopened: மீண்டும் புதுப்பொலிவுடன் திறக்கப்படட்ட ராமேஸ்வரம் கபே.. பலத்த சோதனைகளுக்கு பின் வாடிக்கையாளர்கள் அனுமதி.! 

மருத்துவமனையில் அனுமதி: அதிக கலோரிகள் கொண்ட குழம்பை அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட ஜோசப், திடீர் உடல்நலக்குறைவு எதிர்கொண்டுள்ளார். அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர் முதலில் சுயமாக மருந்து எடுத்துக்கொண்டுள்ளார். ஆயினும், எந்த பலனும் இல்லை. தீவிர உடல்நல பாதிப்புடன் வீட்டில் சரிந்து கிடைத்தவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். How To Join in VIJAY MAKKAL IYAKKAM: தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய வேண்டுமா?.. இதோ விஜய் வெளியிட்டுள்ள வீடியோ..! 

அனாபிலாக்ஸிஸ் அலர்ஜி: மருத்துவர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், ஜனவரி மாதம் 04ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அனாபிலாக்ஸிஸ் (Anaphylaxis) எனப்படும் தீவிர அலர்ஜி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஜோசப், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் நேரடியாக பதித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். உணவு விஷமாக மாறி அவரின் மரணம் நடந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையிலும் இத்தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.