மார்ச் 09, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், வைட்பீல்டு பகுதியில் ராமேஸ்வரம் கபே (Whitefield Rameshwaram Cafe) என்ற தனியாருக்கு சொந்தமான தேநீரகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 8 நாட்களுக்கு முன்பு அங்கு வருகை தந்த மர்ம நபர், ஐஇடி ரக வெடிகுண்டை வெடிக்கச்செய்தார். இதனால் உயிர்சேதம் இல்லை எனினும், சிலர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூர் காவல்துறையினர், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். How To Join in VIJAY MAKKAL IYAKKAM: தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய வேண்டுமா?.. இதோ விஜய் வெளியிட்டுள்ள வீடியோ..!
தகவல் கொடுத்தால் ரூ.10 இலட்சம் சன்மானம்: கபேக்கு வெடிகுண்டுடன் வருகை தந்த நபரின் சிசிடிவி கேமிரா காட்சிகள் கண்டறியப்பட்டு, அவருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். அவர் குறித்த தகவலை தெரிவிப்போருக்கு ரூ.10 இலட்சம் ரொக்க சன்மானம் வழங்கப்படும் எனவும், தகவல் தெரிவித்த நபரின் ரகசியம் காக்கப்படும் எனவும் என்.ஐ.ஏ அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. தொடர் விசாரணை, உச்சகட்ட பாதுகாப்பு என கர்நாடக நகரில் உள்ள பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. Actress Engaged With Rashid: ‘அன்பே ஆருயிரே’ பட நடிகைக்கு விரைவில் திருமணம் – தனது நீண்ட நாள் காதலனை கரம்பிடிக்கிறார்..!
பாதுகாப்புடன் திறக்கப்பட்ட கபே: இந்நிலையில், வெடி விபத்திற்கு பின்னர் ராமேஸ்வரம் கபே மீண்டும் மக்கள் செயல்பாட்டுக்கு 8 நாட்களை கடந்து திறக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு வெடித்ததால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய நிர்வாகத்தினர் முயற்சியெடுத்து, தற்போது 8 நாட்களுக்கு பின்னர் மீண்டும் கபே திறக்கப்பட்டுள்ளது. இச்சமயம் முன்பை போல அல்லது, கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் உடமைகள் சோதனைக்கு பின்னர் அவர்கள் அனுமதி செய்யப்படுகின்றனர்.
#WATCH | Bengaluru, Karnataka: Checking of the customers being done at the Rameshwaram cafe.
The cafe has reopened for people, 8 days after the blast. pic.twitter.com/kwclTU4ksE
— ANI (@ANI) March 9, 2024