Mexico Gun Shooting (Photo Credit : @EconomicTimes X)

ஜூன் 26, மெக்சிகோ (World News): மெக்சிகோ நாட்டின் குவானாஜுவாட்டோ மாகாணம், ராபுவாடோவில் நடந்த கிறிஸ்தவ மத நிகழ்ச்சியில் மக்கள் பலரும் பங்கேற்று கோலாகலமாக கொண்டாடினர். நகரின் தெருவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மது அருந்திவிட்டு நடனம் ஆடியபடி மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், திடீரென மக்கள் கூட்டத்தின் நடுவே புகுந்த மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் திடீர் தாக்குதல் நடத்தினர். மர்மநபர்களின் துப்பாக்கிசூட்டால் (Mexico Gun Shooting) அலறிய மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தப்பி ஓட முயற்சித்துள்ளனர். Philippines Earthquake: பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. வீதியில் தஞ்சமடைந்த மக்கள்.! 

துப்பாக்கிசூட்டில் 12 பேர் பலி :

இந்த சம்பவத்தில் கிட்டத்தட்ட 12 பேர் பலியான நிலையில், 20 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரியவரவே, துப்பாக்கிசூடு நடத்தியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி கிளாடியா சீன்பாமும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த மாதத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சியிலும் இதே போன்ற ஒரு துப்பாக்கி சூட்டில் ஏழு பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் அதே சம்பவம் அரங்கேறியது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மத நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டாடிய மக்கள் :

துப்பாக்கிசூடு குறித்த வீடியோ :