Myanmar Earthquakes 2025 (Photo Credit: @UNICEF X)

மார்ச் 29, பேங்காக் (World News): மியான்மர் மற்றும் தாய்லாந்து நாட்டில் உள்ள பேங்காக் ஆகிய நகரங்களை மையமாக வைத்து, நேற்று (28 மார்ச் 2025) அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் சுமார் 7.7, 7.8 அளவில் அடுத்தடுத்து சுமார் 3 முதல் 5 முறைகள் வரை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக தாய்லாந்து, மியான்மர், சில சீன பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டது. குறிப்பாக தாய்லாந்து தலைநகர் பேங்காக் நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிர்ந்தன. மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்த நீச்சல் குளங்களில் இருந்து நீர் வெளியேறியது. GT Vs MI IPL 2025: ஐபிஎல் 2025: குஜராத் சூப்பர் ஜெயிண்ட்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதல்.. ஆட்டம் எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.! 

கண்ணீரில் வரவழைத்த நிலநடுக்கம்:

இந்நிலையில், நிலநடுக்கத்தின் பேரழிவைத்தொடர்ந்து அங்கு மீட்பு பணியாளர்கள் களமிறக்கப்பட்டனர். இராணுவம், மீட்புப்படை என பலரும் மீட்பு பணிகளில் இறங்கி இருக்கின்றனர். இதனிடையே, மியான்மர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட தாக்கத்தில் சிக்கிய 684 பேர் உயிரிழந்தனர். மேலும், 1670 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மியான்மர், தாய்லாந்து பகுதியில் ஏற்பட்ட சேதங்கள்:

மியான்மரில் இரயில்வே தண்டவாளம் இடமாறிப்போன பகீர் காட்சிகள்:

தாய்லாந்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நீச்சல் குளம் நீர் வெளியேறிய காட்சிகள்:

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கடும் சேதங்கள்: