மார்ச் 29, அகமதாபாத் (Gujarat News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (CSK Vs RCB IPL 2025 Highlights) ஆட்டத்தில், 17 ஆண்டுகளுக்கு பின் சென்னை மைதானத்தில் பெங்களூர் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, 29 மார்ச் 2025, இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில், நடப்பு ஐபிஎல் 2025 சீஸனின் 09 வது ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் குஜராத் ஜெயிண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (Gujarat Giants Vs Mumbai Indians) அணிகள் மோதுகின்றன.
குஜராத் எதிர் மும்பை போட்டி எப்போது? நேரலை பார்ப்பது எப்படி?
இன்று இரவு 07:30 மணிக்கு தொடங்கி நடைபெறும் ஆட்டத்தில், சொந்த மண்ணில் வெற்றிபெற குஜராத் அணியும், குஜராத்தை சொந்த மண்ணில் வீழ்த்த மும்பை அணியும் போராடும். இளம் வீரர்கள் கொண்ட அணியாக குஜராத் படைபலத்துடன் தயாராகி இருப்பதால், அதனை எதிர்கொள்ள மும்பை அணியும் தயாராகியிருக்கிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) தொலைக்காட்சி, ஜியோ ஹாட்ஸ்டார் செயலி (Jio HotStar) ஆகியவற்றில் நேரலையை காணலாம். CSK Vs RCB Highlights: 17 ஆண்டுக்குப்பின் வஞ்சம் தீர்த்த ஆர்சிபி: சொந்த மண்ணில் சென்னை படுதோல்வி.. மாஸ் காட்டிய பெங்களூர்.. ராயல் சிங்கங்களிடம் வீழ்ந்த சென்னை சிங்கங்கள்.!
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் (MI Squad IPL 2025):
மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians Squad 2025) அணியில், சூர்ய குமார் யாதவ், வில் ஜேக்ஸ், நமன் திர், பெவன் ஜேகப்ஸ், ரோஹித் சர்மா, என் திலக் வர்மா, ரொபின் மின்ஸ், ஸ்ரீஜித் கிருஷ்ணன், ரயான் ரிக்கேல்டன், ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), கோர்பின் போஸ், முஜீப் உர் ரஹ்மான், விக்னேஷ் புதூர், சத்யநாராயான பென்மேட்ஸா, அஸ்வினி குமார், ரேஸி தோபி, அர்ஜுன் தெண்டுல்கர், ட்ரெண்ட் போல்ட், மிட்செல் சான்டனர், ராஜ் அங்கட் பாவா, ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாகர், கரண் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் (GT Squad IPL 2025):
குஜராத் டைட்டன்ஸ் அணியில் (Gujarat Titans IPL 2025 Squad) ஷுப்மன் ஹில் கேப்டனாக இருக்கிறார். அணியில் ஹேர்பெனே ருத்தேர்போர்ட், ஷாருக் கான், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், ராகுல் திவேதியா, மணிபால் லோமர், வாஷிங்க்டன் சுந்தர், மாணவ் சூதர், கரீம் ஜனத், நிஷாந்த் சிந்து, காகிஸோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா, ஜெயந்த் யாதவ், குலவந்த் க்ஹெஜுலியா, ரஷீத் கான், ஜெரால்டு கோட்ஸ், இஷாந்த் சர்மா, சாய் கிஷோர், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இன்று இரவு 07:30 மணிக்கு குஜராத் Vs மும்பை போட்டி:
𝕊ℍ𝕆𝕎𝕋𝕀𝕄𝔼 🔜 in Amdavad ⚔🍿 #MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #GTvMI pic.twitter.com/FeioOiLu1a
— Mumbai Indians (@mipaltan) March 29, 2025