
மே 23, நேபாளம் (World News): இந்தியாவின் அண்டை நாடான இமயமலையை ஒட்டியுள்ள நேபாளத்தில் இன்று அதிகாலை சுமார் 1.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகளில் 4.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் சில வினாடிகள் வரை உணரப்பட்டு பின் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஒரு சில இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து நள்ளிரவு நேரத்தில் வீதிகளில் தஞ்சமடைந்தனர். Tsunami Alert: திடீரென குலுங்கிய கட்டிடங்கள்.. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு.!
நேபாளத்தில் நிலநடுக்கம் :
An earthquake of magnitude 4.3 on the Richter Scale hit Nepal at 1:33:53 IST: National Centre for Seismology pic.twitter.com/fyK99fyDfN
— ANI (@ANI) May 22, 2025