Papua New Guinea Earthquake on 15 April 2024 (Photo Credit: @AnaBredenberg X)

ஏப்ரல் 15, போர்ட் மோரெஸிபி (World News): சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இயற்கை பேரிடரில், நிலநடுக்கம் அவ்வப்போது பல உலக நாடுகளை அதிரவைக்கிறது. சில நேரம் கடுமையான அளவில் ஏற்படும் நிலநடுக்கம் மனித உயிர்களையும் காவு வாங்குகிறது. அதிலளவு ஏற்படும் நிலநடுக்கத்தின் அளவு சுனாமிக்கு வழிவகை செய்யும் என்பதால், தீவு நாடுகளின் நிலைமை நிலநடுக்கத்தின் போது கவலையை அளிக்கும் வகையில் இருக்கிறது. CSK Vs MI Highlights: 4 பந்துகளில் மாஸ் காட்டிய தோனி, 4 ஓவரில் 4 விக்கெட்டை எடுத்து அசத்திய பத்திரானா.. சதமடித்த ரோஹித்.! 

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்: இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் பசுபிக் பெருங்கடல் மீது அமைந்துள்ள தீவுக்கூட்ட நாடான பப்புவா நியூ கினியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நியூ பிரிட்டன் (New Briton Region Earthquake) மாகாணத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. நிலத்திற்கடியில் 79 கி.மீ ஆழத்தில் மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்க ஆய்வு மையங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

சுனாமி எச்சரிக்கை இல்லை: இதனால் அங்குள்ள பல நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கியதைத்தொடர்ந்து, மக்கள் பதறியபடி வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலநடுக்கத்தால் தற்போது வரை சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.