Boeing 777 Loss Tire in San Fransisco (Photo Credit: @BNONews X)

மார்ச் 08, சான் பிரான்சிஸ்கோ (World News): உலகளவில் பிரதானமாக விமானங்களை உற்பத்தி செய்து வரும் போயிங் நிறுவனத்தின் தயாரிப்புகள் தற்போது பல்வேறு கோளாறுகளை சந்தித்து வருகிறது. இது உலகளாவிய போயிங் விற்பனை சந்தையை கடுமையாக பாதித்து இருக்கிறது. இந்நிலையில், மீண்டும் போயிங் நிறுவனத்திற்கு அதிர்ச்சிதரும் சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடந்துள்ளது. Sugar Patients Stress: மனஅழுத்தம் அதிகரித்தால் சர்க்கரை நோயும் அதிகரிக்கும் - காரணமும், தீர்வும்..! 

போயிங் 777 விமானம்: அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரின் விமான நிலையத்தில் இருந்து, யூனிட்டைட் ஏர்லைன்ஸ் (United Airlines) நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 (Boeing 777) ரக விமானம் விமான ஓடுபாதையில் இருந்து மேலெழுப்பியது. விமானம் மேலெழும்பியதும் (Take off), விமானி விமானத்தின் சக்கரத்தை விமானத்திற்கு வைத்திப்பதற்கான அமைப்பை இயக்கினார். Free Food: மாமியார் மருமகளுக்கு உணவு இலவசம்.. ஈரோடு உணவகத்தின் அதிரடி அறிவிப்பு..!

போயிங்-க்கு நேரம் சரியில்லை? அச்சமயம் விமானத்தின் சக்கரம் ஒன்று கழன்று, நடுவானில் இருந்து கீழே விழுந்தது. இந்த சம்பவத்தில் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த காரின் மீது சக்கரம் விழுந்து கார் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக மனித உயிர்களுக்கு இழப்போ, காயமோ இல்லை. இதுகுறித்த அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணையும் நடந்து வருகிறது. ஏற்கனவே போயிங் ரக விமானங்கள் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொண்டு அவதிப்பட்டு வரும் போயிங் நிறுவனத்திற்கு, நேரம் சரியில்லை என்பதை போல அடுத்தடுத்த சர்ச்சை நடந்து வருகிறது.