டிசம்பர் 25, பெல்கிரேட் (Belgrade): மத்திய ஐரோப்பியாவில் உள்ள செர்பியாவில், சமீபத்தில் ஜனாதிபதி மற்றும் உள்ளாட்சித் தேர்தல் ஆகியவை நடைபெற்ற முடிந்தன. இதில், அங்கு ஆளும் கட்சியாக இருந்த செர்பிய முற்போக்கு கட்சி 46.72 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தது.
தேர்தலில் முறைகேடு புகார்: இதனிடையே வெற்றி கொண்டாட்டங்கள் நடைபெற்றிருந்த இரண்டாவது நாளில், அதிபர் அலெக்சாண்டர் வுசிக் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வெற்றியடைந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனால் அங்கு அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் போராட்டம்: இந்த செய்தி அங்குள்ள எதிர்க்கட்சியினரால் விவாதமாக்கப்பட்டு, பல நகரங்களின் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், நேற்று இரவு 10:30 மணியளவில் செர்பிய (Serbia Protest) நகரில் உள்ள அரசு அலுவலகம் மீது போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். IND Vs SA Test Series: இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையேயான டெஸ்ட் தொடருக்கு தீவிரமாக பயிற்சியெடுக்கும் ரோஹித் சர்மா..!
காவல்துறையினர் தடியடி: இதனையடுத்து, காவல்துறையினர் களத்தில் இறக்கப்பட்டு கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கண்ணீர் புகை கொண்டு வீசி விரட்டியடிக்கப்பட்டனர். மேலும், அவர்களின் மீது பெப்பர் ஸ்பிரேவும் அடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தேர்தலை இரத்து செய்ய கோரிக்கை: நடைபெற்ற முடிந்த தேர்தலில் செர்பியாவின் மத்திய இடது கூட்டணி கட்சிக்கு 23.56 விழுக்காடு வாக்குகளும், செர்பிய சோஷலிஸ்ட் கட்சிக்கு 6.56 விழுக்காடு வாக்குகளும் கிடைத்துள்ளன. இந்த வன்முறைக்கு செர்பிய எதிர்க்கட்சிகள் காரணம் என்று ஆளும்கட்சி குற்றச்சாட்டை முன்வைக்கும் நிலையில், தேர்தல் மற்றும் வெற்றியை ரத்து செய்யக்கோரி தொடர் போராட்டமும் நடந்து வருகிறது.
Thousands gathered in the Serbian capital in an anti-government protest which turned into clashes with riot police, with demonstrators demanding the annulment of parliamentary and local elections https://t.co/PwIG2RnSzS pic.twitter.com/bUMshmF9p4
— Reuters (@Reuters) December 25, 2023