நவம்பர் 17, வாஷிங்க்டன் டிசி (World News): கடந்த அக்.07ம் தேதி இஸ்ரேல் அரசை எதிர்த்து, பாலஸ்தீனியத்தை சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் தாக்குதல் நடத்தினர். 2500க்கும் அதிகமான ஹமாஸ் பயங்கரவாதிகள், பாலஸ்தீனியம் - இஸ்ரேல் எல்லையை கடந்து, இஸ்ரேலுக்குள் சென்று யூத மக்களை குறிவைத்து கொடூர தாக்குதல் நடத்தினர்.
அன்றைய நாள் திரும்பும் திசையெல்லாம் இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல், மக்களின் வீடுகளில் அத்துமீறி நுழைந்து தலையை துண்டித்து கொடூர கொலைகள், பெண்களை கடத்திச்சென்று பலாத்காரம், சித்ரவதை செய்து கொலை என கொடுமைகள் தொடர்ந்தது. இதனையடுத்து, இஸ்ரேல் தனது முழு இராணுவத்தையும் பதிலடி கொடுக்க களமிறங்கியது.
பயங்கரவாதிகளின் தாக்குதலில் 1400க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் உயிரிழந்த நிலையில், இஸ்ரேலின் பதிலடியை சிக்கி தற்போது வரை 12 ஆயிரத்தை கடந்து பாலஸ்தீனிய மக்கள் பலியாகி இருக்கின்றனர். இவர்களில் சொற்ப அளவிலான பயங்கரவாதிகளும் அடங்குவர். ஹமாஸ் பயங்கரவாதிகளின் செயல், இன்று அவர்களின் சொந்த நாட்டு மக்களை கொன்று குவிக்க காரணமாக அமைந்துவிட்டது. MP & Chhattisgarh Election: விறுவிறுப்புடன் நடைபெறும் தேர்தல்: வைரசையில் காத்திருந்து வாக்களிக்கும் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநில மக்கள்.!
பாலஸ்தீனியத்தில் உள்ள ஐ.நா முகாம்களில் எஞ்சிய மக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உலக நாடுகள் மருத்துவ உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து வழங்குகிறது. ஒருசிலர் தங்களின் சொந்த நாடுகளை விட்டு, பிற நாடுகளுக்கு அகதியாக குடிபெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள வாஷிங்க்டன் வெள்ளை மாளிகை முன்பு, பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் சடலங்களை போல வேடமிட்டு நூதன போராட்டம் நடத்தினர். இஸ்ரேல் மற்றும் அதற்கு ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்க அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்நூதன போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அரசுக்கு தொடக்கத்தில் இருந்து அமெரிக்க இராணுவ தளவாடங்களை வழங்கி வருகிறது. இது மத்திய கிழக்கில் உள்ள நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தினாலும், மத்திய கிழக்கு நாடுகள் ஹமாஸுக்கு ஆதரவு தெரிவிப்பதால் பதற்றம் தொடருகிறது. ஒருவேளை மத்திய கிழக்கு நாடுகளின் இலக்குகள் அல்லது அமெரிக்காவின் இலக்குகள் தாக்கப்படும் பட்சத்தில், கட்டாயம் அது போருக்கு வழிவகுக்கும் என சர்வதேச அளவில் அஞ்சப்படுகிறது.
VIDEO | Dozens of fake corpses kept outside White House in Washington DC as protestors call for a ceasefire between Israel and Gaza.
(Source: EFE/PTI) pic.twitter.com/J11S1XTcay
— Press Trust of India (@PTI_News) November 16, 2023