பிப்ரவரி 28, பாம்கோ (World News): மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மாலி நாட்டில், பர்லினோ (Burlina Faso) பாசோவில் இருந்து பேருந்து ஒன்று கேனியேபா நகர் நோக்கி பயணித்து கொண்டு இருந்தது. இந்த பேருந்தில் 40 க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துகொண்டு இருந்தனர். Cuddalore Shocker: மது, கஞ்சா வாங்க பணம் தராததால் ஆத்திரம்; பெற்றெடுத்த தாயின் கழுத்தை நெரித்துக்கொன்ற மகன்.!
உள்ளூர் நேரப்படி மாலை 05:00 மணியளவில் பேருந்து பாம்கோ நகரில் சென்றுகொண்டு இருந்த நிலையில், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பகோயீ (Bagoe River) நதியில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 31 பேர் பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். Youngster Died Accident: கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
மேலும், 10 பேர் காயத்துடன் உயிருக்கு போராடி இருக்கின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.