
மே 21, வாஷிங்டன் (World News): அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாகாணத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அக்ஷய் குப்தா (வயது 30), தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வந்தார். இவர் டெக்சாஸில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது, சக இந்தியரான தீபக் கண்டேலால் (வயது 31) என்பவரால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். Flag Lowering Ceremony: அட்டாரி - வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு.. மீண்டும் தொடக்கம்..!
கத்தியால் குத்திக்கொலை:
இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தீபக் கண்டேலால் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், அவர் தனது மாமாவைப் போலவே இருந்ததால் தான் கொலை (Murder) செய்ததாக தெரிவித்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.