
மே 20, பஞ்சாப் (Punjab News): ஜம்மு காஷ்மீரில், பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிலவியது. இதனால் கடந்த மே 08ஆம் தேதி முதல் கொடியிறக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 12 நாட்களுக்கு பிறகு பஞ்சாப் அமிர்தசரசில் உள்ள அட்டாரி-வாகா (Attari Wagah Border) எல்லையிலும், பெரோஸ்பூரில் உள்ள ஹூசைனிவாலா எல்லையிலும் இன்று (மே 20) முதல் கொடி இறக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. Joe Biden: முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய்.. இறுதிக்கட்ட மருத்துவ சிகிச்சைகள்.!
கொடியிறக்கும் நிகழ்வு:
கொடியிறக்கும் நிகழ்வை பார்க்க நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1959ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வந்த கொடியிறக்க நிகழ்வு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர், மே 08இல் இருந்து நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது, 12 நாட்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.