Indonesia Earthquake (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 29, பாலி (World News): உலகளவில் இயற்கை பேரிடர்களில், மக்களுக்கு கடும் அச்சுறுத்தலையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தவல்லது நிலநடுக்கம். நிலநடுத்தட்டுகள் என்று அழைக்கப்படும் பகுதியின் மீது அமைந்திருக்கும் நாடுகளில் நிலநடுக்கத்தின் அபாயம் அதிகளவு உள்ளது. அதேபோல, கடலுக்கடியில் குமுறிக்கொண்டிருக்கும் எரிமலை வெடிக்கும் பட்சத்தில், அதனால் ஏற்படும் அழுத்தத்தினாலும் நிலநடுக்கம், சுனாமி போன்றவை ஏற்படும்.

நிலநடுக்கலங்களில் இந்தியாவை பொறுத்தமட்டில், கடந்த 2004ல் ஏற்பட்ட இந்தோனேஷியா நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஏற்பட்டு பெரும் உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டது. இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்படும் பட்சத்தில், இந்திய மக்கள் சற்று கவலையில் ஆள்வதும் அவர்களின் வேதனையின் வெளிப்பாடாக அமைந்துவிட்டது. Theni Shocking: காதலுக்காக தந்தையை போட்டுத்தள்ள ஸ்கெட் போட்டுக்கொடுத்த மகள்.. 16 வயது 2கே பிரின்சஸின் பகீர் செயல்.!

இந்நிலையில், இன்று இந்தோனேஷியா தீவுகளில் (Indonesia Earthquake Today) நிலநடுக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் பாலி தீவுப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7 புள்ளிகளாக பதிவானதாக ஐரோப்பிய நிலநடுக்க ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவின் மாற்றம் நகரில் இருந்து வடக்கு திசையில் 201 கி.மீ தூரத்தில், பூமிக்கடியில் 518 கி.மீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது எனவும் ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தை அமெரிக்க நில ஆய்வு மையமும் உறுதிபடுத்தியுள்ளது. ஆனால், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.