Fire Rescue Team (Photo Credit: @Independent X)

நவம்பர் 03, ஈரான் (World News): மத்திய கிழக்கில் உள்ள நாடுகளில், தற்போது இஸ்ரேல்-பாலஸ்தீனியம் தொடர்பான பிரச்சனை காரணமாக பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவுவதாக கூறி தனது போர்க்கப்பல்களை அனுப்பி வைத்து, ஆயுத உதவியும் செய்கிறது.

மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேலுக்கு எதிரான நாடுகள், பாலஸ்தீனத்திற்கு ஒத்துழைப்பு தந்து, பயங்கரவாதிகளுக்கு திரைமறைவில் ஆயுதங்களை வழங்கி வருகிறது. ஒருவேளை அமெரிக்காவை அவர்கள் தாக்கினால், அமெரிக்கா களமிறங்கி உலகப் போர் ஏற்படலாம் என்ற அபாயமும் உண்டாகியுள்ளது. Accenture Layoff: அக்சென்சர் பணியாளர்களுக்கு அடுத்த ஆப்பு; 83 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய தலைமை முடிவு.! 

இந்த நிலையில், ஈரானில் உள்ள டெஹ்ரான் நகரில் இருந்து, வடமேற்கில் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள கிளன் மாகாணத்தில் இருக்கும் காஸ்பியன் கடலோரம், லாங்ரூட் நகரில் உள்ளூர் நேரப்படி காலை 06 மணியளவில் போதை மறுவாழ்வு மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் மையத்தில் இருந்த 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 16 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

காலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பலரும் உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர். இதனால் தீயின் பிடியில் சிக்கி 32 பேர் உயிரிழந்த சோகம் அங்கு நடந்துள்ளது.