
ஜூன் 24, ஈரான் (World News Tamil): கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் - பாலஸ்தீனியம் போர் (Israel Palestine War) தொடர்ந்து 2 ஆண்டுகள் கடந்து நடக்கிறது. ஹமாஸ் குழுவினருக்கு உதவி செய்ததாக ஈரான் மற்றும் லெபனான் நாடுகளில் எல்லை தாண்டிய தாக்குதலையும் பிரதமரின் உத்தரவின் பேரில் இஸ்ரேல் ராணுவம் (Israel Army) முன்னெடுத்து வந்தது. கடந்த வாரத்தில் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக பல அச்சுறுத்தல் வீடியோக்களை வெளியிட்டு வந்த ஈரானின் மீது பிராந்திய பாதுகாப்பு கருதி இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடவடிக்கையை முன்னெடுத்தது. World News: 37 நாட்களில் 4 முறை திருமணம் செய்த ஊழியர்.. ஊதியத்துடன் கூடிய விடுப்புக்காக வினோத செயல்.!
பதற்ற சூழல் அதிகரிப்பு:
இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அபரீதமாக அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் - ஈரான் போர் (Israel - Iran War) சூழல் அபாயமும் உண்டாகி கடந்த ஒரு வாரமாக போர் நடந்து வந்தது. இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் திட்டத்தை முன்னெடுத்துள்ள ஈரானும், போரில் அமெரிக்காவின் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வகையிலான எச்சரிக்கை அறிவிப்புகளையும் வெளியிட்டது. இதனால் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கி, ஈரானின் அணு ஆயுத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. மேலும் ஈரான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் தாக்குதல் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஈரான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
இந்நிலையில் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று ஈரான் போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போர் நிறுத்தம் வேண்டி அதிகமாக கெஞ்சலில் ஈடுபட்டார் என நக்கல் பாணியுடன் தனது கருத்தை தெரிவித்து போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து இஸ்ரேலிடம் அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் - ஈரான் நாடுகளில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கச்சா எண்ணெய் பேரல்களை ஏற்றி காத்திருக்கும் கப்பல்கள், ஈரான் எல்லையை கடந்து இனி சர்வதேச நாடுகளுக்கு பயணிக்கும் என்பதால் கச்சா எண்ணெய் விலை வரும் நாட்கள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.