Marriage File Pic (Photo Credit : Pixabay)

ஜூன் 23, தைவான் (World News): தைவான் நாட்டில் வசித்து வரும் நபர் ஒருவர் சம்பளத்துடன் கூடிய விடுமுறைக்காக தனது மனைவியை நான்கு முறை திருமணம் செய்து விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டின் சட்டப்படி திருமணமாகும் நபர்களுக்கு 8 நாட்கள் ஊதியத்துடன் (Paid Leave) கூடிய விடுப்பு தர வேண்டும்.

மனைவியை 4 முறை திருமணம் செய்த ஊழியர்:

இதனை அறிந்த வங்கி ஊழியர் ஒருவர் பெண் ஒரே பெண்ணை சுமார் 37 நாட்களில் நான்கு முறை மீண்டும் மீண்டும் திருமணம் செய்து 32 நாட்கள் விடுமுறை பெற்றிருக்கிறார். ஒவ்வொரு முறையும் விடுமுறை முடியும் சமயத்தில் விவாகரத்து செய்துவிட்டு, மீண்டும் தனது மனைவியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதெல்லாம் தேவையா? 14 வயது சிறுவனுக்கு நிர்வாண போட்டோ அனுப்பிய பெண்..! 

வங்கிக்கு அபராதம் :

இந்த விவகாரத்தை கண்டறிந்த வங்கி அதிகாரிகள், ஐந்தாவது முறை அவர் கேட்டபோது விடுமுறையை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தான் சட்டப்படி செயல்பட்டதாக வங்கிக்கு எதிராக நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்த நிலையில், வங்கிக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தற்போது மீண்டும் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.