Israel Iran War (Photo Credit: @verydarkblackm X)

அக்டோபர் 26, டெல் அவிவ் (World News): ஈரான் கடந்த அக்டோபர் 01-ஆம் தேதி இஸ்ரேல் (Israel) மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இன்று (அக்டோபர் 26) பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இஸ்ரேல் சார்பில் ஈரான் தலைநகர் டெக்ரான் (Tehran) மற்றும் கராஜ் (Karaj) நகரங்களில் உள்ள ராணுவ இலக்குகள் மீது போர் விமானங்கள் மூலம் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. Pakistan Terror Attack: பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்; 10 பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக்கொலை..!

இஸ்ரேல் - ஈரான் போர்:

பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்படும் ஹமாஸ் (Israel Hams War) அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் கடந்த 2023-ஆம் ஆண்டு போர் நடவடிக்கையை தொடங்கியது. ஹமாஸ், ஈரான் (Iran) ஆதரவு அமைப்பாகும். இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மேலும், இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து வரும் லெபனான் (Lebanon) நாட்டில் செயல்படும் தனது ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மூலம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.

வான்வெளி தாக்குதல்:

இதனால், ஈரான் கடந்த அக்டோபர் 01-ஆம் தேதி இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது. சுமார் 185 ஏவுகணைகளை ஈரான் தனது நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv-Yafo) மற்றம் அதனை சுற்றிய இடங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 26) அதிகாலையில் ஈரான் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் அதன் அருகே உள்ள கராஜ் நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. டெக்ரான் மற்றும் கராஜ் நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளில் ஏவுகணை உற்பத்தி மையங்களையும் குறிவைத்து தாக்கியுள்ளது. இதனால் இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: