Japan Volcano Eruption (Photo Credit: @TheInsidePaper X)

நவம்பர் 29, ஜப்பான் (Japan): சர்வதேச அளவில் 1500 எரிமலைகள் எப்போதும் வெடிக்கும் அபாயத்தில் இருந்து வருகின்றன. இவற்றுள் ஆண்டுக்கு 80க்கும் அதிகமான எரிமலைகள் வெடித்து சிதறி வருகின்றன.

பூமியில் நிலநடுத்தட்டுகள் மற்றும் எரிமலை வெடிப்புக்கு வாய்ப்புள்ள பகுதியின் மீது ஜப்பான் நாடு அமைந்துள்ளது. அங்குள்ள கடல் பரப்பில் நீருக்குள் மூழ்கி இருக்கும் எரிமலைகள், அவ்வப்போது வெடித்து சிதறுவதும் உண்டு. Bharat Gaurav Yatra: சென்னையில் இருந்து ஆன்மீக இரயிலில் பயணித்த 40 பயணிகளுக்கு உடல்நலக்குறைவு: விஷமாக மாறிய உணவால் சோகம்.! 

நீருக்குள் இருந்து வெளியேறி நிலப்பரப்புகளாகும் எரிமலைகள், கடல் நீரில் தொடர்ந்து குளிர்ந்து வந்தாலும் வெடிப்புகள் அவ்வப்போது தொடருகிறது.

இந்நிலையில், ஜப்பான் நாட்டில் உள்ள லுவோ ஜிமா (Lwo Jima Island) எரிமலை, கடந்த நவம்பர் 01ம் தேதி முதல் வெடிக்க தயாராகி இருந்த நிலையில், தற்போது வெடித்து சிதறி இருக்கிறது. இதன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

எரிமலை வெடிப்புக்கு முன்பு அங்குள்ள சுற்றுவட்டாரத்தில் 5 ரிக்டர் புள்ளிகள் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.