Visual from Video (Photo Credit: X)

நவம்பர் 07, ஜெருசலேம் (World News): கடந்த அக்டோபர் ஏழாம் தேதி முதல் இஸ்ரேல் - ஹமாஸ் (Israel - Hamas War) பயங்கரவாதிகள் இடையேயான போர் நடைபெற்று வருகிறது. முதலில் இஸ்ரேல் தனது மக்களை இழந்தாலும், தற்போதைய அதிரடித்தாக்குதல் பன்மடங்கு பதிலடியை கொடுத்துள்ளது.

ஹமாஸ் பயங்கரவாதிகளின் கொடூர செயல்களால் 1400 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு வழங்கப்பட்ட பதிலடி தாக்குதலில் சிக்கி, பத்தாயிரம் பாலஸ்தீனிய பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஹமாஸின் இஸ்ரேலுக்கு எதிரான முதல் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம், இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாகவும்-மறைமுகமாகவும் செயல்பட்டு வந்த அண்டை நாடுகளை அம்பலப்படுத்தி இருக்கிறது. Wipro Ends Hybrid: வாரத்தின் 3 நாட்களாவது அலுவலகத்தில் வேலை; அழைப்புடன், எச்சரிக்கையும் சேர்த்து விடுத்த விப்ரோ.! 

தற்போது பாலஸ்தீனிய மக்கள் மனிதாபிமான அடிப்படையிலான உதவியை மட்டுமே உலக நாடுகளிடம் இருந்து பெற்று வருகின்றனர். இஸ்ரேலுக்கு உறுதுணையாக அமெரிக்கா இருப்பது மட்டுமல்லாது, தனது போர்கப்பலையும் அனுப்பியுள்ளது.

சர்வதேச அளவில் உள்ள நாடுகளில் வசித்து வரும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய மக்கள், தாங்கள் வாழும் நாடுகளில் தங்களது நாட்டுக்கு ஆதரவாக போராடி வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள வெகுசில நகரங்களில் இருக்கும் அவர்கள், தங்களின் போராட்டத்தை முன்னெடுத்து ஆதரவை வெல்படுத்துகின்றனர்.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பாலஸ்தீனிய ஆதரவாளர் மற்றும் இஸ்ரேல் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், பாலஸ்தீனிய ஆதரவாளர் தாக்கியதில் இஸ்ரேலிய ஆதரவாளர் தலையில் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.