ஆகஸ்ட் 23, மெக்சிகோ (World News): மெக்சிகோ நாட்டில் உள்ள புபேலா (Pubela) நகரில் இன்று பேருந்து - கனகர லாரி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 16 பேர் பரிதாபமாக பலியாகினர். 36 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு காயமடைந்தோரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை ஒயாக்ஸ்அகா மாகாண அலுவலகம் உறுதி செய்துள்ளது. Avoid Cyber Crime Tips: ஆன்லைன் மோசடிகளை தவிர்க்கும் அசத்தல் வழிமுறைகள் தெரியுமா?.. எளிய ஆலோசனைகளில் சேமிக்கப்படும் உங்கள் பணம்..! விபரம் இதோ.!
விபத்தில் 8 தாங்கள், 7 பெண்கள், ஒரு சிறுமி என 16 பேர் பலியாகியது உறுதி செய்யப்பட்டுள்ளது. காயமடைந்தோர் அனைவரும் தேஹுஅஸான் (Tehuacan) அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மெக்சிகோவை பொறுத்தமட்டில் 1 இலட்சம் பேரில் 12% நபர்கள் விபத்துகள் காரணமாக உயிரிழப்பது உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது. உலகளவில் அதிக சாலை விபத்துகள் ஏற்படும் நாடுகளின் பட்டியலில் மெக்சிகோ 111வது இடத்தில் இருக்கிறது.
Fifteen Mexicans and one Venezuelan died in a road accident in central Mexico, officials from Mexico's INM migration institute said in a statement https://t.co/qp42tGp2EV pic.twitter.com/a8Z03lZinX
— Reuters (@Reuters) August 23, 2023