Africa Floods (Photo Credit: @firehorse249791 X)

மே 13, காங்கோ (World News): ஆப்பிரிக்க நாடான காங்கோவில் (Congo) பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, தெற்கு கிவு மாகாணத்தில் தொடர் கனமழை பெய்துள்ளது. இதன்காரணமாக, நங்கன்ஜா நகரில் உள்ள டாங்கன்யிகா உட்பட பல ஏரிகள் நிரம்பியுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்ததால் ஏரியின் கரை உடைந்து வெள்ளப்பெருக்கு (Flood) ஏற்பட்டுள்ளது. 86 வயது தந்தை செய்யும் காரியமா இது? மகனின் காதலியை கரம்பிடித்து ஷாக்.!

62 பேர் சடலமாக மீட்பு:

இதனால் ஏரி கரையோரம் அமைந்துள்ள கசாபா கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 150 வீடுகள் சேதமடைந்துள்ளது. வெள்ளப்பெருக்கு மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு படையினர் படகுகள் மூலம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர். இதுவரை 62 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். மேலும், 50 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே, அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.