
மே 12, சீனா (World News): சீனாவை சேர்ந்தவர் பியாவோ (வயது 86). இவரது மகன் கடந்த மார்ச் மாதத்தில் கல்லீரல் நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவரின் காதலியான வாங், வருங்கால மாமனாரான பியாவோவை பராமரித்து வந்ததாக தெரியவருகிறது. இந்த நிலையில் இவரின் மகள் கின் தந்தையை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்து, வீட்டை குத்தகைக்கு விட முயற்சி செய்துள்ளார். Taliban bans chess in Afghanistan: செஸ் போட்டியை சூதாட்டத்தில் சேர்த்த ஆப்கானிஸ்தான் அரசு.. அதிரடி தடை விதிப்பு.!
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பியாவோ வேறு வழியின்றி தனது மறைந்த மகனின் காதலியை திருமணம் செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மகள் கின் குடும்ப சொத்தை அபகரிப்பதற்காக மட்டுமே வாங் தனது தந்தையை திருமணம் செய்திருப்பதாக கூறிய நிலையில், தனது மகளை விட வாங் தன்னை நன்றாக கவனித்துக் கொள்வதாகவும், தனது பணத்தின் மீது அவருக்கு எந்த ஆர்வமும் இல்லை என்றும் பதிலளித்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.