Visuals: New Jersey Sister City Approve Kailasa (Picture Credit: SriNithyananda Instagram)

ஜனவரி 13: இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டு, ஆட்கடத்தல் தொடர்பான பல புகார்களில் சிக்கி, குஜராத் நீதிமன்றத்தால் ரெட் கார்னர் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி நித்யானந்தா. இந்தியாவில் இருந்து வெளிநாடு தப்பி சென்ற நித்தியானந்தா, கைலாஸா என்ற நாட்டினை விலைக்கு வாங்கியதாக தெரியவருகிறது.

அந்த நாட்டினை பூரண இந்துக்களுக்கான நாடு என அறிவித்துள்ள நித்தி, தனது சிஷ்யர்-சிஷ்யர்களுடன் வசித்து வருகிறார். அங்கிருந்து உலகளாவிய பக்தகோடிகளுக்காக தினமும் இணையவழியில் சிஷ்யர்களை சந்தித்து ஆசியுரை வழங்கியும் வருகிறார். எங்கிருக்கிறது என்று இன்று வரை மர்மமாக இருந்த கைலாஸா நாட்டிற்கு தற்போது ஐ.நா சபையில் இடம் கிடைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, அமெரிக்காவில் இருக்கும் நியூஜெர்சி, நெவார்க் நகரம் கைலாஸா நாட்டினை நாடாக அங்கீகரித்து கையெழுத்திட்டுள்ளதாகவும், அதற்கான கையெழுத்தை நெவார்க் நகர பிரதிநிதி மற்றும் ஐ.நாவுக்கான நிரந்தர கைலாஸா உறுப்பினர் விஜயபிரியை நித்தியானந்தா பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. Kushboo about Hindutva: பிரதமர் மோடியிடம் விவேகானந்தரை பார்க்கிறேன் – நடிகை குஷ்பூ மனம் திறந்து பேச்சு.! 

இந்த விஷயம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், அதில் கைலாஸா அதிபரின் சிஷ்யை ராஜ அலங்காரத்தில் மின்னுகிறார். இந்திய அரசுக்கு டிமிக்கி கொடுக்கும் சாமியார், உலக நாடுகளில் தனக்கென ஒரு நாடை உருவாக்கி அதற்கான அங்கீகாரம் வாங்க முயற்சிப்பதாக வெளியாகும் தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

முன்னதாக நித்தியானந்தா தனது நாட்டிற்கு தன்னையே அதிபராக அறிவித்து, பல துறைகளுக்கு என அமைச்சர்களையும் நியமனம் செய்திருந்தார். தனது நாட்டிற்கு என காகிதமும் வெளியிட்டுள்ளார். இதற்கிடையே பல நிகழ்வுகள் மக்களிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 13, 2023 04:25 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).