Missile Launch (Photo Credit: @nknewsorg X)

ஜூலை 01, பியோங்கியாங் (World News): சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வரும் வடகொரியாவின், அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அமெரிக்காவை எதிர்த்து அணு ஆயுத உற்பத்தியில் தொடர்ந்து முதலீடு செய்து பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வரும் வடகொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் உற்பத்தியில் மும்மரம் காண்பித்து செயல்பட்டு வருகிறது. வடகொரியா தேசிய தினத்தில், அந்நாட்டு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட அணு ஆயுதங்களும் பிரம்மாண்டமான முறையில் காட்சிப்படுத்தப்படுகின்றன. DK as RCB Coach & Mentor: பெங்களூர் அணியின் வழிகாட்டி, பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமனம்; "ஈ சாலா கப் நம்தே" கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! 

கூட்டுப்பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிம் அரசு அதிர்ச்சி கொடுத்த சம்பவம்:

இந்நிலையில், நேற்று வடகொரியாவின் இருந்து 2 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அதில் ஒன்று தோல்வியடைந்து அவர்களின் எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே தவறுதலாக விழுந்ததாகவும் தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் தெரிவித்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வடகொரியா மற்றும் ஜப்பான் நாட்டின் கடற்படைகள் இணைந்து, கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை செலுத்தி சோதனை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறது. Cuddalore AIADMK Administrator Murder Case: கடலூர் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பரபரப்பு திருப்பம்; மூவர் கும்பல் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்.! 

ரஷியாவின் உதவியால் புத்தாக்கம் அடையும் வடகொரியா இராணுவம்:

கடந்த 5 நாட்களுக்கு முன்பு வடகொரியா ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், அது தோல்வியடைந்ததாக கருதப்பட்டது. அந்த தோல்விக்கு பின் ஐந்து நாட்களுக்குள் அடுத்த ஏவுகணை சோதனை முயற்சி நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு ஏவுகணை 163 கி.மீ அளவில் மட்டுமே சென்றது. மற்றொரு ஏவுகணை 600 கி.மீ தூரத்தை கடந்ததாக தெரியவருகிறது. ரஷியாவின் உதவியுடன் இராணுவ கட்டமைப்பை வடகொரியா வலுப்படுத்தி வரும் நிலையில், ரஷியா உக்ரைன் போரில் பயன்படுத்திய குறுகிய அணு ஆயுத ஏவுகணை தொழில்நுட்பத்தையும் வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வடகொரியாவின் அணு ஆயுத தயாரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. எனினும், சீனா, ரஷியா போன்ற நாடுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் அந்நாட்டுக்கு உதவி வருகின்றன.