Earthquake (Photo Credit: @NCS_Earthquake X)

டிசம்பர் 18, பாகிஸ்தான் (Pakisthan): பாகிஸ்தானில் இன்று காலை ராஜன்பூர் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. முன்னதாக பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் கடந்த டிசம்பர் 15ம் தேதி காலையில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. Salaar Part 1 Ceasefire Trailer: ஆக்சனில் மிரட்டும் பிரபாஸ்.. சலார் படத்தின் புதிய டிரைலர் இதோ.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு.!

லடாக்கில் நிலநடுக்கம்: இந்த நிலையில், லடாக் பகுதியில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு மணி நேரத்தில் நான்கு முறை நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில், லடாக்கின் கார்கில் பகுதியில் 5.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பின் லடாக்கின் மற்றொரு பகுதியில் 3.8 ரிக்டர் அளவுகோலில் இரண்டாவது முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், மூன்றாவது நிலநடுக்கம், 4.8 ரிக்டர் அளவுகோலில் ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அடுத்த சில நிமிடங்களிலேயே ஜம்மு காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவுகோலில் மற்றுமொருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கங்களால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.