ஏப்ரல் 24, தைப்பே (World News): தைவான் (Taiwan) நாட்டின் தலைநகரான தைப்பேவில் (Taipei City) இந்த மாதத்தின் ஆரம்பத்தில் பயங்கர நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டது. அந்த கடும் நிலநடுக்கத்தால் பல மாடி கட்டிடங்கள் சரிந்து விழுந்து தரைமட்டமாகின. அதிலிருந்தே இன்னும் மீளாத நிலையில், நேற்று மாலை 3.08 மணி முதல் இன்று மதியம் 1.30 மணி வரையில் மொத்தம் 247 நிலநடுக்கங்கள் தைவான் நாட்டில் ஏற்பட்டுள்ளது. National Panchayati Raj Day 2024: தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்.. இந்த நாளின் முக்கியத்துவம் என்ன?

இந்த பலமுறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் உயிருக்கு அஞ்சி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் தைவானில் சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.