Shehbaz Sharif (Photo Credit : @GIU_Today X)

ஜூன் 16, பாகிஸ்தான் (World News): இஸ்ரேல் - பாலஸ்தீனியம் இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் பாலஸ்தீனியத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்த மத்திய கிழக்கு நாடுகளை எதிர்த்தும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் ஹமாசுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்த ஈரானுக்கு இஸ்ரேல் ஏற்கனவே பல எச்சரிக்கைகளை விடுத்திருந்தது.

இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை :

மேலும் தன்னிடம் அணு ஆயுத சக்தி உள்ளது. எந்த நாட்டை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தாக்குவேன் என பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனிடையே தனது நாட்டுக்கு அச்சுறுத்தல் வருவதாக கூறி இஸ்ரேல் ஈரானில் உள்ள பல நகரங்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக ஈரானில் அணு ஆயுத மையங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்கள், அதில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் தங்கியுள்ள இடங்கள், ஈரானின் முப்படை தலைமை தளபதி ராணுவ மையங்கள் உட்பட பல இடங்களில் இந்த தகவல் முன்னெடுக்கப்பட்டது.

இஸ்ரேல் - ஈரான் போர் அபாயம் :

இந்த தாக்குதலுக்கு கடும் எச்சரிக்கை தெரிவித்த ஈரான் ராணுவமும் பதில் தாக்குதலை முன்னெடுத்திருக்கிறது. இருதரப்பும் சண்டையிட்டுக் கொள்வதால் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் துணை இருப்பதாக ஈரான் முதலில் குற்றம் சாட்டிய நிலையில், இஸ்ரேல் தன்னிச்சையாக செயல்படுவதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்தது. Aryan Ansari: அகமதாபாத் விமான விபத்து.. நெஞ்சை பதறவைக்கும் தகவல் சொன்ன சிறுவன்.! 

இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் :

தற்போது இஸ்ரேல் மற்றும் ஈரான் மாறி மாறி தாக்குதலை தொடர்வதால் பதற்ற சூழல் அதிகரித்துள்ளது. அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பதில் தாக்குதல் நடவடிக்கைகளை இரு நாடுகளும் கைவிட வேண்டும் என உலக நாடுகளின் தலைவர்களும் தங்களது வலியுறுத்தல்களை சமூக வலைதளங்கள் மூலமாக வெளிப்படுத்த வருகின்றனர்.

பாகிஸ்தான் பிரதமர் கண்டனம் :

அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இஸ்ரேல் நாடு ஈரான் மீது தாக்குதல் நடத்திய விஷயத்திற்கு கண்டனம் தெரிவிப்பதாக தனது எக்ஸ் வலை பக்கத்தில் தெரிவித்திருந்தார். முன்னதாக இவர் கண்டனம் என்ற வார்த்தைக்கு பதிலாக ஆங்கிலத்தில் காண்டம் என்ற வார்த்தையை பயன்படுத்தி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்:

இந்த விஷயம் சமூக வலைதள நெட்டிசன்களிடையே மிகப்பெரிய பேசுபொருளாகியுள்ள நிலையில், பலரும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்பை (Shehbaz Sharif) வசைப்பாடி வருகின்றனர். தவறான உள்ளடக்கத்தை வெளியிட்ட பிரதமர் அலுவலகம் உடனடியாக அந்த ட்விட்டை நீக்கி புதிய ட்வீட்டை பதிவு செய்தது. ஆனால் இதனை முன்னதாகவே ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்த நெட்டிசன்கள் பலரும் அதனை வைத்து கலாய்த்து வருகின்றனர்.