PM Narendra Modi With World G7 Leaders in Japan 2023 Summit (Photo Credit: Twitter)

மே 21, ஜப்பான் (Japan News): ரஷியா - உக்ரைன் இடையே தொடங்கிய போர் 451-வது நாளை கடந்து நடைபெற்று வருகிறது. போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து இருக்கின்றனர். மேற்கத்திய நாடுகள் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக ஆயுதங்கள் வழங்கி வருகின்றன.

ஐ.நா சபையின் மூலமாக உலக நாடுகள் இருதரப்பு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன. இந்தியா முதல் நாடாக இன்று வரை பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை வைத்து வருகிறது.

தற்போது ஜப்பான் நாட்டில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள சென்றிருந்த நிலையில், அங்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து உரையாற்றினார். உக்ரைன் போருக்கு பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். Kerala Wife Swap Case: மனைவியை மாற்றும் விவகாரம்; புகார் கொடுத்த பெண் மர்ம கொலை, கணவர் தற்கொலை முயற்சி.. கேரளாவில் பரபரப்பு.!

இந்த விஷயம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், "போரினை முடிவுக்கு கொண்டு வர இந்தியா தனிப்பட்ட முயற்சியில் அனைத்து விதமான முயற்சியையும் மேற்கொள்வோம். மோதலை அரசியல் மற்றும் பொருளாதார காணோட்டத்தில் பார்க்கவில்லை.

இவை மனிதாபிமானம் மற்றும் மனித மதிப்புடன் தொடர்பு கொண்டவை. ஒன்றரை ஆண்டுகளாக நாம் தொலைபேசியில் பேசி இருக்கிறோம். நீண்ட நாட்களுக்கு பின் நாம் நேரில் சந்தித்துள்ளோம். உக்ரைன் போர் உலகத்திற்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது. இது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. பேச்சுவார்த்தையில் அனைத்தையும் சரி செய்யலாம்" என தெரிவித்தார்.

ஜி7 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்ட உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது, பல தலைவர்களும் கருப்பு மற்றும் நீல நிறத்திலான ஆடைகளை அணிந்து வர, பிரதமர் நரேந்திர மோடி வெண்ணிற ஆடையில் தோன்றினார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.