Kerala Wife Swap Case

மே 21, கோட்டயம் (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியில் வசித்து வரும் 26 வயது இளம்பெண்மணி, கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் புகார் வழங்கினார். புகாரில், "தனது 33 வயது கணவர் சமூக வலைத்தளத்தில் இருக்கும் குழு ஒன்றில் உறுப்பினராக இருக்கிறார்.

அக்குழுவில் உறுப்பினராக இருப்போர், அடிக்கடி தங்களின் குடும்பத்தினரோடு சந்தித்துக்கொள்வார்கள். இவர்கள் நேரில் சந்திக்கும்போது எனது கணவர் என்னையும் அழைத்து சென்றிருந்தார். அங்கிருந்தோருடன் என்னை உறவு மேற்கொள்ள கட்டாயப்படுத்தவே, எனக்கு அது பிடிக்கவில்லை.

கணவரிடம் அதனை நான் தெரிவித்தும் என்னை கட்டாயப்படுத்தி பலவந்தப்படுத்தினார்கள். இதனால் சிலரோடு தகாத உறவு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். எனக்கு விருப்பம் இல்லை என்று கூறியும் மீண்டும் என்னை கட்டாயப்படுத்தினார்கள். Theni Crime: 17 வயது சிறுமியை காதலித்த இளைஞர் கழுத்தை வெட்டி கொடூர கொலை; தேனியை பதறவைத்த காதல் சம்பவம்.!

இவர்கள் எங்களை போல பல ஜோடிகளை குழுவில் இணைத்து, கணவரை மாற்றி உல்லாசமாக இருக்கும்போது வீடியோ எடுக்கிறார்கள். அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், கேரளாவில் இவ்வாறான கும்பல் குழுக்களை தொடங்கி தம்பதிகளை நேரில் அழைத்து துணைகளை மாற்றி உல்லாசமாக இருக்க வைத்தது அம்பலமானது.

மேற்கூறிய கும்பலை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், புகார் கொடுத்த பெண்மணி கணவரை பிரிந்து கோட்டயத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரின் வீடு நேற்று முன்தினம் முதல் பூட்டியே இருந்த நிலையில், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். Acid Attack: திருமணம் செய்ய மறுத்த கள்ளகாதலனின் மனைவி மீது ஆசிட் வீச்சு; வீடுபுகுந்து வெறித்தனம் காண்பித்த பெண்மணி.. ஊசலாடும் உயிர்.!

அப்போது இளம்பெண் இரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக மீட்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, காவல் துறையினர் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பெண்ணின் கணவரை தேடுகையில் அவர் தனது வீட்டில் வாயில் நுரைதள்ளிய நிலையில் மீட்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், காவல் துறையினர் விசாரணை தொடர்ந்து வருகிறது.