![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/Heat-Wave-Photo-Credit-Pixabay-380x214.jpg)
மே 15, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே, கடந்த ஏப்ரல் மாதத்தில் கடுமையான வெப்பம் உணரப்பட்டது. இந்தியா மட்டுமல்லாது ஆசிய நாடுகள் அனைத்திலும் 40 டிகிரியை கடந்து வெப்பநிலை பதிவு செய்யப்பட்டு, பில்லியன் கணக்கான மக்கள் கடும் அவதிப்பட்டனர். இதற்கு முக்கிய காரணமாக காலநிலை மாற்ற பிரச்சனை பின்னணியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. காலநிலை மாற்றத்துடைய வெப்ப அலைகள், ஆசியாவில் வாழ்ந்து வந்த மக்களை வறுத்தெடுத்து.
46 டிகிரி வரை பதிவான வெப்பநிலை: தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மியான்மர், வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளில் ஏப்ரல் மாதம் வெப்பநிலை உச்சகட்ட அளவை பதிவு செய்தது. பிலிப்பைன்ஸ் நாட்டில் பகலில் ஏற்படும் வெப்பம் இரவிலும் தீராமல் தொடர்ந்து. இந்தியாவில் சராசரி வெப்பநிலை என்பது 43 டிகிரி முதல் 46 டிகிரி வரை பல நாட்கள் பதிவு செய்யப்பட்டது. மேற்கு ஆசியா, மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளிலும் 40 டிகிரி வெயில் உணரப்பட்டது. Assassination Attempt: முன்னாள் பெண் அமைச்சரின் பாதுகாவலர் மீது கார் ஏற்றிக்கொலை செய்ய முயற்சி: வீட்டு வாசலில் நடந்த சம்பவம்.. அதிர்ச்சி காட்சிகள்.!
வெப்ப அளவீடுகள் தரவுகளில் சோதனை: வெப்பம் மற்றும் அதுசார்ந்த பிரச்சனைகளால் வங்கதேசத்தில் 28 நபர்களும், இந்தியாவின் 5 நபர்களும், காசாவில் 3 நபர்களும், தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் மரணங்கள் ஏற்பட்டன. உலகளவில் எண்ணெய், நிலக்கரி, எரிவாயு ஆகியவை தொடர்ந்து எரிக்கப்படுகின்றன. இதனுடன் மனித செயல்பாடுகளும் காலநிலை மாற்றத்திற்கு உந்துசக்தியாக அமைகிறது. ஆசிய அளவில் வெப்பமயமாதலின் விளைவை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு செய்து பழைய தரவுகளுடன் ஒப்பிட்டு பகுப்பாய்ந்து வருகின்றனர்.
மேற்கு ஆசியப்பகுதிகளில் வெப்பமயமாதல்: எல் நினோ மற்றும் லா நினோ என இரண்டு காலநிலை மாற்றங்கள் கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய பகுதிகளை மட்டுமல்லாது மேற்கு ஆசியாவில் உள்ள சிரியா, லெபனான், இஸ்ரேல், பாலஸ்தீனியம், ஜோர்டன் ஆகிய நாடுகளையும் பாதித்து வெப்பத்தின் அளவை பன்மடங்கு உயர்த்தி இருக்கிறது. மேற்கு ஆசியப்பகுதிகளில் மனித முயற்சியால் ஏற்படும் வெப்பமயமாதல் பிரச்சனை, வெப்பத்தின் அளவை 40 டிகிரிக்கும் மேல் உயர்த்துகிறது. இதனால் வெப்பத்தின் இயல்பு அளவு 1.7 டிகிரி அளவில் உயர்ந்துள்ளது. FB Insta Down: உலகளவில் முடங்கியது பேஸ்புக், இன்ஸ்டாகிராம்.. பயனர்கள் அவதி.!
வெயிலினால் கேள்விக்குறியாகும் எதிர்காலம்: பின்வரும் காலங்களில் மேற்கு ஆசியாவில் வெப்பநிலை கடுமையான அளவும் உயரும் என்றும், ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் வெப்ப அலைகளானது கட்டாயம் பெரும் சவாலை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் எனவும் விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தின் நலன் கருதி ஒவ்வொரு ஆசிய நாடுகளும் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் விஞ்ஞானிகள் குழுவினால் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.