Heatwave (Photo Credit: pixabay)

ஆகஸ்ட் 14, சியோல் (World News): தென் கொரியாவில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது. இந்த வெப்ப அலையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெப்பம் தாக்குதல் (Extreme heat) காரணமாக இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வெப்பம் தாக்கி நோய்வாய்ப்பட்டுள்ளனர். சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. வெப்பத்தால் இதுவரை 6,58,000 கோழிகள் உள்பட 7,03,000 கால் நடைகளும், 8,95,000 வளர்ப்பு மீன்களும் இறந்துள்ளன. DDoS Attack Disrupted Musk-Trump Interview: எலான் மஸ்க்-டொனால்ட் டிரம்ப் நேர்காணல் நேரடி ஒளிபரப்பு.. தாமதமாக்கிய DDOS தாக்குதல்..!

காரணங்கள்: உலகளாவிய வெப்பமயமாதல் காரணமாக வெப்ப அலைகள் அதிகரித்துள்ளன. தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றங்களும் இதற்கு காரணமாக இருக்கலாம். தென் கொரியா அரசு இந்த வெப்ப அலை தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெப்ப அலையின் தாக்கத்தை குறைக்க ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றும், இரவு நேரங்களில் மேற்குப் பகுதி மற்றும் கடலோரப் பகுதிகளைத் தாக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.