Joe Biden (Photo Credit : @ANI X)

மே 19, அமெரிக்கா (World News): அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் தனது பதவி காலம் முடியும் முன்பே ஒரு சில உடல் நலக்கோளாறு தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருந்தார். இதனிடையே ஜோ பைடனுக்கு ப்ராஸ்டேட்(Prostate) புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு :

கடந்த வாரம் மருத்துவ சிகிச்சைக்கு சென்ற ஜோ பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ப்ராஸ்டேட் புற்றுநோய் இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புற்றுநோய் செல்கள் எலும்புகளுக்கு பரவி உள்ளதாகவும், இது ஒன்பதாவது நிலை வடிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புற்றுநோயின் தீவிரத்தன்மை காரணமாக அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் ஆதரவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Pakisthan Food Crisis: போரைத் தொடர்ந்து உணவுப்பஞ்சம்.. பரிதவிக்கும் பாகிஸ்தான்.! 

பைடனின் உடல்நிலை கவலைக்கிடம் :

புற்றுநோய் 1 முதல் 10 வரை இலக்கங்கள் கொடுத்து அளவிடப்படுகிறது. பைடன் தற்போது ஒன்பதாவது நிலையில் இருப்பதால் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான வகையில் இருப்பதாகவும் நிபுணர்களால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் கட்டிகளை அகற்றுவது மிக கடினம் என்றாலும், உரிய மருத்துவ சிகிச்சைகள் மற்றும் 82 வயதுடைய பைடனின் உடல்நிலை போன்றவை காரணமாக மருத்துவர்கள் தங்களால் ஆன முயற்சியை திறம்பட செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் பொறுப்பில் இருந்து விலகிய பைடன் :

தேர்தலின் போது தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜோ பைடன் அதிபர் வேட்பாளர் பொறுப்பில் இருந்து பின்வாங்கிய நிலையில், அந்த வாய்ப்பு கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவில் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்து அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.