
மே 27, வாசிங்டன் (World News): அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் (Donald Trump) பதவியேற்ற பிறகு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், விசா முடிந்தும் வெளியேறாவிட்டால், நாடு கடத்தப்படுவீர்கள் என இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் நாடு கடத்தல் சர்ச்சைக்கு மத்தியில், அமெரிக்காவில் கல்லூரி வகுப்புகளைத் தவிர்ப்பது அல்லது அவர்களின் திட்டங்களை விட்டு வெளியேறுவது குறித்து இந்திய மற்றும் பிற வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது. திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் அவதி.. பணம் கொடுத்து வெளிநாட்டு பெண்களை வாங்கும் ஆண்கள்.!
அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கை:
இதுகுறித்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறினால், வகுப்புகளைத் தவிர்த்தால், படிப்புத் திட்டத்தை பள்ளிக்குத் தெரிவிக்காமல் இருந்தால், மாணவர் விசா ரத்து செய்யப்படும். மேலும், எதிர்கால அமெரிக்க விசாக்களுக்கான தகுதியை இழக்க நேரிடும். அதனால், பிரச்சனையையும் தவிர்க்க எப்போதும் விசாவின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து, மாணவர் நிலையைப் பராமரிக்கவும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.