மே 27, சீனா (World News): உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இன்றளவும் அறியப்பட்டு வருகிறது. அபரிதமாக அதிகரித்துள்ள மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீன அரசு கடுமையான சட்டங்களையும் கொண்டுவந்து அதனை செயல்படுத்தியது. அதன்படி தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என விதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் சீன தம்பதிகள் ஆண் குழந்தைகளையே விரும்பிய காரணத்தால், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதமும் குறைந்தது. Emmanuel Macron: கணவரின் முகத்தில் தாக்கிய மனைவி.. பிரான்ஸ் அதிபருக்கே இந்த நிலைமையா?
மணப்பெண் கிடைக்காமல் அவதிப்படும் ஆண்கள் :
முதலில் இந்த திட்டம் சீனாவுக்கு சாதகமாக இருந்தாலும், பின் நாட்களில் இந்த திட்டமானது மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியது. இதனால் அந்த சட்டமும் திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் சீனாவில் உள்ள பல ஆண்கள் பெண்கள் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், அங்குள்ள 3 கோடிக்கும் அதிகமான சீன ஆண்கள் மணப்பெண் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை பயன்படுத்தி பெண்களை திருமணம் செய்து வைக்கும் வேளையில் மோசடி கும்பல் சட்டவிரோத செயல்களையும் கையில் எடுத்துள்ளது.
பணம் கொடுத்து பெண்களை வாங்கி திருமணம் :
வணிக எல்லையை தாண்டி திருமண ஏஜென்சிஸ் நிறுவனம், எல்லை தாண்டிய டேட்டிங் வீடியோ மூலமாக வலைகளை விரித்து மோசடி செய்து வருகிறது. வெளிநாட்டு பெண்களை பணம் கொடுத்து அடிமைகள் போல வாங்கி திருமணம் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக வங்கதேசம் நாட்டில் இருந்து பல பெண்கள் சீனாவுக்கு நாடு கடத்தி வைக்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்நாட்டு அரசு சீன தூதரகத்திற்கு எதிராக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறான கும்பலிடம் சிக்கி மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.