ஜூலை 09, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்குள் சுமார் 1200 யானைகள் உயிரிழந்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் மட்டும் 245 யானைகள் இருந்துள்ளன. இந்திய அளவில் இருக்கும் 27,000 தொடர்ந்து புலம்பெயரும் சூழலில் தள்ளப்படுகின்றன. கடத்த 2019 - 2021ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் 45 யானைகள் இரயிலில் அடிபட்டு உயிரிழந்து இருக்கின்றன.
இந்திய இரயில்வே அமைச்சகத்தின் தகவலில் அவை உறுதி செய்யப்பட்டுள்ளன. யானைகளின் பாதைகளை தடுக்க மின்வேலி அமைப்பது, தீப்பந்தங்களை காண்பித்து மிரட்டி கொளுத்துவது என யானைகள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. இவற்றை தடுக்க வேண்டும் என இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் குழு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதாவது, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹென்றி ஸ்மித் (Henry Smith), இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு யானைகளை பாதுகாப்பது தொடர்பாக நாடாளுமன்ற குழுவின் ஒப்புதலுடன் அறிவுறுத்தி இருக்கிறார். இதற்கான கடிதமும் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் 85 பேர் இதற்கான ஒப்புதலை வழங்கி, இந்தியாவில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறது. Longest Kiss Guinness World Records: நீண்ட நேரம் முத்தமிடும் போட்டியை கைவிடுவதாக அறிவித்தது கின்னஸ் நிறுவனம்; காரணம் இதுதான்..!
இந்தியாவில் யானைகளை பாதுகாக்க கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும், அதனை தீண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவற்றின் வாழ்விடங்கள் மற்றும் வழிப்பயணங்களின் இடங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
யானைகளுக்கு தற்போது ஏற்படும் நிலை என்பது தொடர்ந்து வரும் பட்சத்தில், இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள யானைகள் அனைத்தும் அழிவின் விளிம்பு நிலைக்கு சென்றுவிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.