ஜூலை 08, சென்னை (Guinness World Records): சர்வதேச அளவில் சாதனையாளர்களை வெளிக்கொணர கின்னஸ் உலக சாதனை புத்தகம் உதவுகிறது. உலகில் ஒவ்வொரு விஷயத்திலும் சிறந்து விளங்கும் நபர்கள் இருக்கிறார்கள்.
இவர்களின் சாதனைகளையும், அதன் முயற்சிகள் வெற்றி அடையும் பட்சத்தில் சர்வதேச அளவில் அவர்களுக்குக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவதால் கின்னஸ் உலக சாதனை புத்தகம் புகழ்பெற்றுகிறது.
கின்னஸில் நீண்ட நேரம் முத்தமிடும் போட்டி என்பது இருந்து வந்தது. இந்த போட்டியின் வெற்றியாளர்களாக தாய்லாந்து நாட்டினை சேர்ந்த தம்பதிகள் இருக்கின்றனர்.
கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி நடைபெற்ற முத்தமிடும் போட்டியில் கலந்துகொண்ட எக்கச்சை மற்றும் லக்சனா டிரான்அரட் (Ekkachai and Laksana Tiranarat Couple) தொடர்ந்து 58 மணிநேரம் 35 நிமிடம் முத்தமிட்டு மிகப்பெரிய சாதனையை படைத்தது. Chandrayaan-3 Launch Update: ஜூலை 14ல் விண்ணில் சீறிப்பாய காத்திருக்கும் சந்திராயன்-3: முன்னேற்பாடுகள் தீவிரம்.!
இந்த சாதனையை இன்று வரை வேறு யாரும் முறியடிக்கவில்லை. அதாவது, முத்தமிடும் சாதனைக்கான விதிகளின்படி போட்டியாளர்கள் முத்தமிட தொடங்கிவிட்டால் அவர்களின் உதடுகள் பிரிய கூடாது. எந்த விதமான இடைவெளியும் இன்றி (கழிவறைக்கு கூட செல்ல கூடாது, உறங்க கூடாது) தொடர்ந்து முத்தமிட வேண்டும்.
இவ்வாறாக தாய்லாந்து ஜோடி தொடர்ந்து 58 மணிநேரம் முத்தமிட்டு சாதனை படைத்தது. இந்த சாதனை இன்று வரை 10 ஆண்டுகள் கடந்தும் யாராலும் முறியடிக்கப்படவில்லை. ஆனால், போட்டி தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கிறது.
கின்னஸ் நிறுவனம் தொடர்ந்து தனது விதிகளை நடப்பு செயல்பாடுகளுக்கு ஏற்ப புதுப்பித்து வருகிறது. அந்த வகையில், நீண்ட நேரம் முத்தமிடும் போட்டியால் போட்டியாளர் மற்றும் அதிகாரிகளுக்கு நீண்ட கலைப்பு, மன ரீதியான பிரச்சனை இருந்து வந்ததாக அவர்களின் ஆய்வுகள் தெரியவந்துள்ளன.
இதனால் கின்னஸ் சாதனை புத்தக நிறுவனம் தனது போட்டியில் இருந்து நீண்ட நேரம் முத்தமிடும் போட்டியை கைவிடுவதாக அறிவித்து இருக்கிறது. இது முத்தப்போட்டிக்காக காத்திருந்த ஜோடிகளுக்கு அதிர்ச்சியை தந்தாலும், அனைவரின் உடல்நலன் கருதி இப்போட்டியை நீக்கம் செய்வதாக கின்னஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.