US Indian Origin Girl Student, Susroonya Koduru (Photo Credit: Twitter)

ஜூலை 28 , ஹஸ்டன் (Houston): அமெரிக்காவில் உள்ள ஹஸ்டன் நகரில் ஹஸ்டன் பல்கலைக்கழகம் (Houston University, Texas, United States) செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலை.,யில் தகவல் தொழில்நுட்ப (Information Technology) பிரிவில் உயர்கலை பிரிவில் பட்டம் பயின்று வரும் இந்திய வம்சாவளி மாணவி சுஸ்ரூன்யா கொடுறு (Susroonya Koduru).

கடந்த ஜூலை 2ம் தேதி மாணவி தனது நண்பர்களுடன் சான் ஜெஸிந்தோ பார்க்கில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென மின்னல் தாக்கவே, தூக்கி வீசப்பட்ட மாணவி அருகே இருந்த குளத்திற்குள் விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்ட நண்பர்கள், விரைந்து செயல்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். மின்னல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவியின் இதயத்துடிப்பு சில நிமிடங்கள் நின்றுபோன நிலையில், அவரது நண்பர்களின் முயற்சியால் மீண்டும் உயிர் வந்துள்ளது. Prabhas FB Hacked: நடிகர் பிரபாஸின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தை முடக்கிய ஹேக்கர்கள்; ரசிகர்கள் அதிர்ச்சி.!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தற்போது 2 வாரங்கள் சிகிச்சைக்கு பின்னர் மெல்ல அவரின் உடல்நலம் தேறி வந்துள்ளது. முதலில் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்த மாணவி சுஸ்ரூன்யா, தற்போது அதன் உதவியின்றி சில நேரம் சுவாசிக்கிறார்.

Lightning Attack (Photo Credit: Pixabay)

இந்த தகவல் அவரின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெற்றோர் நேரில் சென்று மகளை கவனிக்க விசா பணிகள் நடைபெற்று வருவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மாணவியின் உடல்நலம் தேறி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். UP Govt School: மாணவ – மாணவிகள் முன்பு அரைகுறை ஆடையுடன் போதையில் படுத்து உறங்கிய தலைமை ஆசிரியர்; அரசு பள்ளியில் அதிர்ச்சி.!

முதலில் கோமா நிலையில் இருந்த மாணவி, பின் மெல்ல அந்நிலையில் இருந்து விடுபட தொடங்குவதாகவும், அவரின் மூளை செயல்பட தொடங்கியுள்ளது எனவும் மருத்துவர்கள் கூடுதல் தகவல் தெரிவித்துள்ளனர். அவருக்கு நடப்பு ஆண்டுடன் பட்டப்படிப்பு நிறைவு பெறவிருந்த நிலையில், இறுதி சமயத்தில் மின்னல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஹஸ்டனை பொறுத்தமட்டில் அங்குள்ள வானிலை ஆய்வியல் மையத்தின் தகவல்படி ஆண்டுக்கு அங்கு 1.2 மில்லியன் மின்னல் ஏற்படுகின்றன. கடந்த 30 ஆண்டுகள் தரவுகளின்படி, ஆண்டுக்கு 43 பேர் மின்னல் தாக்குதல் காரணமாக உயிரிழக்கின்றனர். மின்னல் தாக்குதல் காரணமாக பாதிக்கப்படும் 10% மக்கள் உயிரிழப்பதாகவும், எஞ்சிய 90% நபர்கள் உடல் நல பாதிப்புடன் அல்லது உடல் உறுப்புகளை இழந்து வாழுகின்றனர்.