ஆகஸ்ட் 15, புதுடெல்லி (New Delhi): குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உடையோர் ஆகியோரை தாக்கும் குரங்கம்மை (Monkey Pox Mpox), சிறிய அளவிலான கொப்புளங்களுடன் தோன்றும். 21 நாட்கள் வரை மனிதர்களை பாதிக்கும் தன்மை கொண்ட குரங்கம்மை, குணமாகிவிடும் எனினும், உரிய மருத்துவ சிகிச்சை பெறும் பட்சத்தில் உயிரிழப்புகளும் தடுக்கலாம். மத்திய & மேற்கு ஆப்பிரிக்காவில் 1970களில் இருந்து மிகப்பெரிய தொற்றாக கவனிக்கப்படும் எம். பாக்ஸ், அவ்வப்போது சர்வதேச அளவிலும் பரவி வருகிறது. Vegetable Pancakes Recipe: வீட்டில் எல்லோரும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. வெஜிடபிள் பான் கேக் செய்வது எப்படி? விபரம் உள்ளே..!
116 நாடுகளில் பரவியுள்ளது:
இந்நிலையில், தற்போது எம்.பாக்ஸ் வைரஸ் சரவதேச அளவில் 116 நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார மையம் (World Health Organization) அறிவித்து இருக்கிறது. பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு காங்கோவில் இருந்து அண்டை நாடுகளுக்கு பரவிய வைரஸ், தற்போது 116 நாடுகளில் தனது தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் பொதுச்செயலாளர் டெட்ரோஸ் அதானம் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார். Microplastics Found in Sugar And Salt: இந்தியாவில் விற்கும் உப்பு, சர்க்கரையில் மைக்ரோ பிளாஸ்டிக்.. வெளியான பகீர் ஆய்வு..!
நோயின் அறிகுறிகள்:
காய்ச்சல், தசை வலி, தொண்டை புண், அரிப்பு, வலி சொறி, தலைவலி, வீங்கிய நிணநீர் கணுக்கள் மற்றும் சோர்வு போன்றவை எம். பாக்சின் அறிகுறியாக கவனிக்கப்படுகிறது. இவ்வாறான புண்கள் உள்ளங்கை, உள்ளங்கால், முகம், வாய், தொண்டை, பிறப்புறுப்பு, ஆசனவாய் ஆகிய இடஙக்ளில் தோன்றும். பாதிக்கப்பட்ட நபரின் உடலில் தோன்றும் திரவம், பின் வெடித்து உடலில் பரவும்.
தற்போது வரை 14 ஆப்ரிக்க நாடுகளில் அதிதீவிரமாக பரவியுள்ள எம். பாக்ஸ் வைரஸ், 14 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. 524 மரணங்களை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2 முறைகள் உலகளவில் எம்.பாக்ஸ் வைரஸ் பரவி இருக்கிறது.