ஜனவரி 11, புதுடெல்லி (New Delhi): தென்கொரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், இந்தியாவில் தனக்கென மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளது. தற்போது ஹூண்டாய் அதன் புதுப்பிக்கப்பட்ட கிரெட்டா காரை (Hyundai Creta) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி வருகின்ற ஜனவரி16 ஆம் தேதி இந்த ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டா காரை ஹூண்டாய் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. Chinese Officials Filled Missiles With Water: சீன ராணுவத்தின் மாபெரும் ஊழல்... ராக்கெட்டுகளில் எரிபொருளுக்கு பதிலாக தண்ணீர்..!
ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டாவின் சிறப்பம்சங்கள்: இந்த காரில் புதிய கிரில், எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர லைட்டுகள், அலாய் வீல், மற்றும் ரூஃப் ரெயில் ஆகியவை உள்ளன. மேலும் எல்இடி பகல்நேர லைட், பம்பர், ஹெட்லைட், பம்பர் மற்றும் பம்பரை சுற்றிலும் சில்வர் நிற ஸ்கிடே பிளேட் ஆகியவை வழங்கப்பட்டு இருப்பதே இந்த காருக்கு வேற லெவல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. 360 டிகிரி கேமிரா, டைப் சி வகை யுஎஸ்பி சார்ஜர், வெண்டிலேட் வசதிக் இருக்கைகள் (முன் பக்கத்தில்), பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவையும் இந்த காரில் உள்ளன. இது ரூபாய் 10.87 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.