டிசம்பர் 18, டெல்லி (Delhi): ஜிதேந்திரா இவி (Jitendra EV), மஹாராஷ்டிராவின் நாசிக்கை சேர்ந்த எலக்ட்ரிக் டூ-வீலர் நிறுவனம் ஆகும். தற்போது இந்த நிறுவனம் புதியதாக கவர்ச்சிக்கரமான தோற்றத்தில் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர் ப்ரிமோ (Primo). இதனை ரூ.79,999 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளனர். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கண்ணாடி போன்றதான உடல் அமைப்பை கொண்டுள்ளது. Police Constable & Son Shot Dead: பட்டப்பகலில் கொள்ளைக்கும்பல் துணிகர செயல்: தலைமை காவலர், காவலரின் மகன் குடும்பத்தினர் கண்முன் சுட்டுக்கொலை.!
ப்ரிமோ சிறப்பம்சங்கள்: ஜிதேந்திரா இவி ப்ரிமோவில் 60 வோல்ட், 26 ஆம்பியர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு உள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 65 கிமீ தொலைவிற்கு இந்த ஸ்கூட்டரில் பயணிக்கலாம். அதுமட்டுமின்றி முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் ட்ரம் பிரேக்கும் உள்ளன. அத்துடன் இந்த ஸ்கூட்டரை ரிவர்ஸிலும் ஓட்ட முடியும். யுஎஸ்பி சார்ஜிங், சைடு-ஸ்டாண்ட் இண்டிகேட்டர், பேட்டரி வெப்பமடைவதை எச்சரிக்கும் வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எல்இடி விளக்குகள் உள்ளிட்டவை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் ஆகும்.