Insurance (Photo Credit: Pixabay)

அக்டோபர் 09, புதுடெல்லி (Automobile News): வாகனங்கள் இயற்கை பேரிடரால் பழுதானாலோ அல்லது விபத்தில் சிக்கி சேதாரமானாலும், பொருளாதாரப் பிரச்சனையை சமாளிக்காவே இந்த வாகன காப்பீடு உள்ளது. இதில் மூன்றாம் நபர் காப்பீடுத்திட்டம், ஒருகிணைந்த காப்பீட்டுத் திட்டம் (Insurance) என்ற வகைகளில் இருக்கிறது. இந்த வாகனத்திற்கான காப்பீட்டின் ஸ்டேட்டஸை ஆன்லைனிலேயே எளிமையாக சரிபார்க்கவும், புதுபிக்கவும் முடியும். RBI Monetary Policy: லோன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - ஆர்பிஐ கவர்னர் அதிரடி..!

வாகனத்திற்கான காப்பீடு ஸ்டேட்டஸை ஆன்லைனில் சரிபார்க்க:

பரிவாஹன் சேவா இணையதளம், ஆர்டிஓ இணையதளம், வாஹான் இணையதளத்திலும் வாகன காப்பீட்டின் நிலையைத் தெரிந்துகொள்லலாம். பரிவாஹன் சேவா இணையத்தில் சென்று , Information Services என்னும் பிரிவில் சென்று Know Your Vehicle Details என்னும் பகுதிக்கு செல்ல வேண்டும். அதில் வாஹன் என்ஆர் இ-சேவை என்னும் தளம் ஓப்பன் ஆகும். அதில் சென்று காப்பீட்டுடன் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை கொடுத்து லாக் இன் செய்ய வேண்டும். பிறகு வெரிஃபிகேஷன் கோடும், வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட எண்ணையும் கொடுக்க வேண்டும். பிறகு அந்த வாகன காப்பீட்டின் முழு விவரமும் கட்டப்படும்.