மார்ச் 11, கலிபோர்னியா (Cinema News): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம், ஹாலிவுட், டால்பி திரையரங்கில் வைத்து 2024ம் ஆண்டுக்கான 96வது (96th Oscars Award)ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஓபன் ஹெய்மர், பார்பி, புவர் திங்ஸ், காட்ஸில்லா மைனஸ் ஒன் உட்பட பல படங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை பெற்றன. உக்ரைன் - ரஷியா போரினை அடிப்படையாக கொண்டு உருவாகிய 20 டேஸ் இன் மரியுபோல் என்ற குறும்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை தட்டிச்சென்றது. இந்நிலையில், நடிகை எம்மா ஸ்டோன் பூவர் திங்ஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார். யார்கோஸ் இயக்கத்தில் வெளியான புவர் திங்ஸ் திரைப்படம், விடுதலைக்காக போராடும் பெண்ணின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி இருந்தது. விருதை பெற்ற நடிகை அவையோர் மற்றும் ரசிகர்களை பாராட்டி, உணர்ச்சி ததும்ப பேசினார்.
And the Oscar for Best Actress goes to... Emma Stone! #Oscars pic.twitter.com/IbKHKWSiby
— The Academy (@TheAcademy) March 11, 2024