Ravi Mohan & Kenishaa (Photo Credit : Instagram)

மே 19, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் சமீபத்தில் தனது பெயரை "ரவி மோகன்" என மாற்றினார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்த நிலையில், தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ரவி மோகன் தனது மனைவியை பிரிவதாகவும், இருவரும் சுமூகமாக பேசி இந்த கடினமான முடிவை எடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்காக இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றமும் சென்றனர்.

பாடகியுடன் காதலா?

இது ஒரு பக்கம் இருக்கவே ரவி மோகன் சமீபகாலமாக பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் இணைந்து பல இடங்களுக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாடகியை காதலிப்பதால் தான், அவர் மனைவியை பிரிந்ததாகவும் அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகி வந்தன. சமீபத்தில் கூட சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் மகள் ப்ரீத்தாவின் திருமணத்திற்கு பாடகி கெனிஷா பிரான்சிஸ் உடன் ரவி மோகன் ஜோடியாக பங்கேற்றார். Samantha & Raj: பிரபல இயக்குனருடன் லிவிங் டூ கெதரில் சமந்தா?.. வெளியான தகவல்.!! 

நடிகரின் மனைவி ஆதங்கம் :

இதற்கு ரவி மோகனின் மனைவியான ஆர்த்தி ஆதங்கம் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், சமூகவலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்ததால் "கெனிஷா தனது வாழ்க்கை துணை" என நடிகர் ரவி மோகன் தெரிவித்தார். மேலும் தனது மனைவி மற்றும் மாமியார் குறித்தும் பல விமர்சனங்களை முன்வைத்தார். இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக மாமியார் சுஜாதா, 'அடுக்கடுக்கான பொய்களால் தரம் தாழ்ந்து போக வேண்டாம். உங்களை கதாநாயகனாகவே பார்த்து வருகிறோம்' என்று கூறியிருந்தார்.

பாடகி கெனிஷாவின் பதில் :

இப்படி இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், சமூக வலைதளங்களில் பாடகி கெனிஷாவையும் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் பாடகி கெனிஷா அனைத்திற்கும் பதிலளிக்கும் வகையில் தனது சமூக வலைதளபக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுளளார். அதில் "அனைத்து இரைச்சல்களுக்கு மத்தியிலும், நம்பிக்கையில் ஒரு அமைதி நிலவுகிறது. எனது ஆன்மாவுக்குள் தனிமையும், அமைதியான போராட்டமும் நடக்கிறது. என் மீது நீங்கள் கற்களும், குச்சிகளும் வீசினாலும் என்னை அது காயப்படுத்தாது. அதிலிருந்து நான் மீண்டு வருவேன். இசையை நான் பற்றிக்கொள்ள விரும்புகிறேன். நாளைய புதிய தொடக்கங்கள் மற்றும் விடியல்கள்களுக்கு ஆழமான துயரங்களில் இருந்து என் ஆன்மா பாடுகிறது" என தெரிவித்துள்ளார்.

வைரலாகும் கெனிஷாவின் பதிவு :

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

A post shared by KENEESHAA (@keneeshaa1)