Samantha & Raj (Photo Credit : @Onlinetadka X)

மே 18, சென்னை (Cinema News): தென்னிந்திய திரைப்பட நடிகைகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தெலுங்கு நடிகருடன் திருமணம் பின் விவாகரத்து என அடுத்தடுத்து பல திருப்பங்களை சந்தித்த சமந்தாவின் வாழ்க்கையில் கடந்த சில ஆண்டுகளாகவே தீராத நோய் பிரச்சனை கூடுதல் தலைவலியை ஏற்படுத்திவிட்டது. இதனால் பெரும்பாலும் படத்தில் கூட நடிக்காமல் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த சமந்தா, சமீபத்தில் சுபம் என்ற திரைப்படத்தை தயாரித்தும் வழங்கியிருந்தார்.

இயக்குனருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்?

அதற்கு முன்னதாக ஹனி என்ற வெப் தொடரிலும் நடித்திருந்த நிலையில், இத்தொடரை இயக்குனர் ராஜ் இயக்கியிருந்தார். இதனிடையே இயக்குனர் ராஜும், நடிகை சமந்தாவும் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், விரைவில் அங்கேயே குடியேறப் போவதாகவும் இணையத்தில் தொடர்ந்து பல வதந்திகள் வெளியாகி இருந்தன. Thug Life Tamil Trailer: சிம்பு, கமலின் மிரட்டல் நடிப்பு.. ஆண்டவரின் தரிசனம்.. தக் லைப் படத்தின் ட்ரைலர் இதோ.! 

உண்மை இதுதான் :

இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ள சமந்தாவின் மேலாளர், "சமந்தா விவாகரத்துக்கு பின்னர் இனி திருமணம் வேண்டாம் என கூறியிருந்தார். வதந்திகளை பரப்ப வேண்டாம். அவர்கள் இருவருக்கும் இடையே எந்த ஒரு பந்தமும் இல்லை. நல்ல நட்பு மட்டுமே நீடிக்கிறது. தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உண்மைக்கு மாறான தகவல்களை பகிர வேண்டாம்" என கூறியுள்ளார்.