![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/12/Australian-High-Commissioner-Philip-Green-Photo-Credit-@ANI-X-380x214.jpg)
டிசம்பர் 14, புதுடெல்லி (New Delhi): உலகில் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இருக்கும் ஆஸ்திரேலியாவில் 783,958 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் (Australia Living Indian) வசித்து வருகிறார்கள். அந்நாட்டு மொத்த மக்கள் தொகையில் 3.1% மக்கள் இந்தியர்கள் ஆவார்கள். இவர்களுக்கான பாதுகாப்பை ஆஸ்திரேலிய அரசு உறுதி செய்கிறது. பெருவாரியாக இருக்கும் மக்கள், தாங்கள் வாழ்ந்து வரும் பகுதிகளில் கோவில்களையும் அமைத்து வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். இதற்கு அந்நாட்டு அரசும் அங்கீகாரம் வழங்குகிறது.
இந்தியாவுக்கு எதிரான விஷமகள்: இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத எண்ணம் கொண்டவர்கள், பஞ்சாப் மாநிலத்தை காலிஸ்தான் நாடாக அறிவிக்கக்கூறியும், காஷ்மீர் பிரச்சனை குறித்தும் பல நாடுகளில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாக்குவது, தூதரகத்திற்கு முன் போராட்டம் செய்து இந்திய தேசியக்கொடியை அவமதிப்பது, இந்து கோவில்களை குறிவைத்து தாக்குவது போன்ற சர்ச்சை செயல்களையும் செய்து வருகின்றனர். Poland’s Prime Minister: போலந்து நாட்டின் புதிய பிரதமர்… டொனால்டு டஸ்க் பதவியேற்பு!
பிரதமரின் கோரிக்கை: அவ்வாறாக சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோவில்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன. இதுதொடர்பாக அந்நாட்டு அரசு தொடர் விசாரணை நடத்தி வருகிறது. கடந்த மே மாதம் ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் நரேந்திர மோடியும் (Narendra Modi), ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸிடம் (Anthony Albanese) இதுதொடர்பாகவும் கோரிக்கை வைத்து பேசி இருந்தார்.
ஆஸி.,க்கான தூதர் பேட்டி: இந்நிலையில், நேற்று இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பிலிப் க்ரீன், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அப்போது அவர் பதில் அளிக்கையில், "ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோவில்கள் தாக்கப்பட்ட விவகாரத்தை, ஆஸ்திரேலியா தீவிரமாக எடுத்து விசாரித்து வருகிறது. இதுபோன்ற விவகாரங்கள் குறித்து விசாரிப்பதில் ஆஸ்திரேலியாவுக்கு பரந்த அனுபவமும் உள்ளது. Child Died After Falling From The Floor : 8வது மாடியிலிருந்து விழுந்த 3 வயது குழந்தை பரிதாப பலி… கதறி அழுத தாய்..! பெற்றோர்களே கவனம்.!!
சர்ச்சைக்கு அனுமதி இல்லை: மத ரீதியான விஷயங்கள் ஆஸ்திரேலிய அரசால் உன்னிப்பாக கவனிக்கப்படும். சர்ச்சை செயல்களுக்கு எப்போதும் அனுமதி வழங்காது. பன்முக கலாச்சாரம் கொண்ட ஆஸ்திரேலியாவில், இவ்வாறான செயல்கள் நடக்காமல் இருக்க தேவையான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியா - ஆஸ்திரேலியா 5 கண்கள் (Five Eyes) அமைப்புடன் சேர்ந்து ரகசிய தாக்குதல் விவகாரங்கள் கண்டறிந்து முறியடிக்கப்படும்.
இந்தியா - ஆஸ்திரேலியா நட்புறவு: சமீபத்தில் அதிகரித்து வரும் காலிஸ்தான் விவகாரம் தொடர்பாகவும் ஆஸ்திரேலிய அரசு கவனம் செலுத்துகிறது. இந்த விஷயங்களை நாங்கள் மூடிய கதவுகளுக்கு பின்னால் விவாதிக்கிறோம். இந்தியா - ஆஸ்திரேலிய வணிக உறவு 50% அதிகரித்துள்ளது. தொடர்ந்து இந்த உறவை வளர்க்க தேவையான முயற்சியை எடுப்போம். ஆஸி., பிரதமரும் இந்தியாவுடன் நட்புறவை மென்மேலும் அதிகரிக்க உள்ள முயற்சிகள் தொடர்ந்து எடுக்கவே வலியுறுத்தி என்னை அனுப்பி வைத்தார். ஒவ்வொரு பேச்சுவார்த்தையும் உத்வேகம் அளிக்கிறது" என தெரிவித்தார்.
#WATCH | On attack on Hindu temples in Australia, Australian High Commissioner Philip Green says, "We take the sort of acts that you're talking about in relation to Hindu temples as seriously as we would take any act in relation to any religious element in our society. We have a… pic.twitter.com/h1Xy0dxTF5
— ANI (@ANI) December 13, 2023