Ajithkumar Racing Youtube (Photo Credit :@ ikamalhaasan X /Wikimedia Commons)

மே 25, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார் (Ajith Kumar). இவர் சமீபத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து குட் பேட் அக்லி (Good Bad Ugly) என்ற படத்தில் நடித்திருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கார் பந்தயங்களிலும் கவனம் செலுத்தி வரும் அஜித், கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் கார் ரேசிங்கில் இருக்கிறார். கடந்த 2023ஆம் ஆண்டு முதல் எம்ஆர்எப் ரேசிங் சீரிஸில் பங்கேற்று ரேஸிங் தொடர்பான அனுபவத்தை தொடங்கியவர், அடுத்தடுத்த பல போட்டிகளிலும் கலந்து கொண்டார். Breaking: தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..! 

யூடியூப் சேனல் தொடங்கிய அஜித்குமார் :

கடந்த ஆண்டு முதல் தீவிர ரேசிங்கில் ஈடுபட்டு வரும் அஜித் தற்போது அஜித்குமார் ரேசிங் என்ற சொந்த பந்தய அணியையும் உருவாக்கி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது புதிய யூடியூப் சேனல் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த யூடியூப் சேனலில் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயங்கள், பயிற்சி வீடியோ மற்றும் பிற வீடியோக்கள் பகிரப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேனல் தொடங்கிய சில மணி நேரத்திலேயே பல லட்சம் ரசிகர்களும் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர்.