மே 24, சென்னை (Chennai News Today): அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கொங்கன் கடலோர பகுதியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றில் மாற்றம் இருக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களவை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. TN School Opening Date: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு?.. டுவிஸ்ட் வைத்த பள்ளிக்கல்வித்துறை.. அதிரடி உத்தரவு.!
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்:
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலோர பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ள காரணத்தால் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல, பாம்பன், தூத்துக்குடியில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி-காரைக்கால் துறைமுகத்தில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. படகுகள் சேதமடைய வாய்ப்புகள் இருப்பதால், பாம்பன், தூத்துக்குடியில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.