ஜனவரி 17, மும்பை (Cinema News): ஹிந்தி திரையுலகில் கடந்த 1987ம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமானவர் அக்ஷய் குமார் (Akshay Kumar). தனது உழைப்பினால் ஹிந்தி நட்சத்திரங்களில் கவனிக்கத்தக்க இடத்தை பெற்ற அக்ஷய், இன்று உலகளவில் ரசிகர்களை பெற்ற இந்திய நட்சத்திரங்களில் ஒருவராகவும் இருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளாக ஹிந்தி திரையுலகில் முக்கிய நட்சித்திரமாக ஜொலித்து வரும் நடிகர் அக்ஷய் குமார், 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.
20 ஆண்டுகளுக்கு பின் ஒரே ஆண்டில் 8 படங்கள்: கதையின் நாயகனாக மட்டுமல்லாது, பெரிய அளவிலான படங்களில் வில்லன் உட்பட பல்வேறு கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் ரஜினிகாந்த் - இயக்குனர் சங்கர் கூட்டணியில் உருவான 2.0 படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹிந்தியில் இவரின் நடிப்பில் வெளியான வெற்றிப்படங்கள் ஏராளம். கடந்த 2023ம் ஆண்டு செல்பி, மிஷன் ராணிகன்ச், ஓஎம்ஜி 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். 2024ல் அவரின் நடிப்பில் ஸ்கை போர்ஸ், சிங்கம் எகைன், ஹேரா பெரி உட்பட 9 படங்கள் வெளியாகவுள்ளன. கடந்த 1994, 2004ம் ஆண்டுக்கு பின்னர் அக்ஷயின் நடிப்பில் 8 க்கும் மேற்பட்ட படங்கள் ஒரே ஆண்டில் மீண்டும் தற்போது வெளியாகவிருக்கின்றன. Coronavirus Strain Attacks BRAIN: மூளையை தாக்கி அழிக்கும் ஆபத்தான வைரஸ் மாதிரிகளை உருவாக்கும் சீன விஞ்ஞானிகள்: மீண்டும் பதறவைக்கும் தகவல்.!
படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த நடிகர்: ஹிந்தி திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம்வந்த ராஜேஷ் கண்ணா மற்றும் டிம்பிள் கபாடியா ஆகியோரின் மகள் ட்விங்கிள் கண்ணாவை (Twinkle Khanna) கடந்த 17 ஜனவரி 2001ம் ஆண்டு அக்ஷய் குமார் கரம்பிடித்தார். தம்பதிகளின் அன்புக்கு அடையாளமாக 2 குழந்தைகள் இருக்கின்றனர். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணாவுக்கு படிக்கச் வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. இதனையடுத்து, அவர் தனது விருப்பத்தை கணவர் அக்ஷயிடம் தெரிவித்துள்ளார். அவரும் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற ஒப்புக்கொள்ள, தற்போது ட்விங்கிள் கண்ணா இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றுள்ளார்.
மனைவியின் பட்டமளிப்பு விழாவில் அக்சய் குமார்: இருவருக்கும் இன்று திருமண நாளினை முன்னிட்டு, அக்சய் குமார் தனது மனதில் உள்ள கருத்துக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த பதிவில், "கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் படிக்கச் வேண்டும் என, அந்த விருப்பத்தை கூறியபோது நான் ஆச்சரியப்பட்டேன். கடுமையாக உழைத்து வீடு, தொழில் மற்றும் குழந்தைகள் என அனைத்து பொறுப்புகளையும் சுமந்து மாணவராகவும் சாதித்து இருக்கிறீர்கள். நான் உங்களை மணந்தபோதே நீங்கள் சூப்பர் பெண்மணி என்பது எனக்கு தெரியும். உங்களின் பட்டமளிப்பு விழாவில் நீங்கள் என்னை பெருமைப்படுத்தினீர்கள். வாழ்த்துக்கள் எனது ஆண்பெண். நானும் பெருமைகொள்கிறேன்" என கூறியுள்ளார்.
நடிகர் அக்சய் குமாருக்கு 56 வயது ஆகிறது, அவரின் மனைவிக்கு 50 வயது ஆகிறது. தம்பதிகளுக்கு பெயர், புகழ், சொத்து, வருமானம் என சகல வைபவம் இருந்தாலும், ட்விங்கிள் தான் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டு 50 வயதில் அதனை நிறைவேற்றி இருக்கிறார். கல்விச்செல்வம் என்றுமே நிலையானது ஆகும்.
View this post on Instagram