Google Doogle Republic Day 2024 (Photo Credit: @ANI_Digital)

ஜனவரி 26, புதுடெல்லி (New Delhi): இந்தியாவிற்கு ஆகஸ்ட் 15, 1947 அன்று சுதந்திரம் கிடைத்தது. அன்று வரை நடைபெற்ற வெள்ளையர்களின் ஆட்சி அகற்றப்பட்டு, இந்தியா தனது சுதந்திர (Republic Day 2024) காற்றை சுவாசித்தது. அதனைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு என அரசியலமைப்பு சட்டம் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரால் உருவாக்கப்பட்டு, 1950ம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி மக்களவையில் வாக்கெடுப்பு நிறைவுபெற்று அமல்படுத்தப்பட்டது. இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறும் பொருட்டு, அன்றைய பிரதமர் நேருவால் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினமாக அறிவிக்கப்பட்டது.

குடியரசு தினவிழா கொண்டாட்டம்: அன்றில் இருந்து ஜனவரி 26ம் தேதி இந்தியா மட்டுமல்லாது, உலகெங்கும் உள்ள இந்தியர்களால் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் இந்திய பிரதமர் நாட்டினை பாதுகாக்கும் படை வீரர்களில், மறைந்த வீரர்களுக்காக வீரவணக்கம் செலுத்துவார். அதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மூவர்ண கொடியை ஏற்றிவைத்து படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிகளை காண்பார். இந்நிகழ்ச்சிகளில் மக்கள் கலந்துகொள்ளவும் அனுமதி உண்டு. மாநில வாரியாகவும் குடியரசுதின கொண்டாட்டங்கள் நடைபெறும். Telangana Republic Day Celebration: ஆளுநராக மூவர்ணக்கொடியை ஏற்றிய தமிழிசை சவுந்தர்ராஜன்; தெலுங்கானாவில் குடியசுத்தின கொண்டாட்டம்.!

கூகுளின் அசத்தல் டூடுள் (Google Doodle Republic Day 2024): இந்நிலையில், கூகுள் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தனது டூடுளை வெளியிட்டு இருக்கிறது. அதில், இந்தியா டிஜிட்டல் மாற்றத்தை வெயில்படுத்தும் பொருட்டு முந்தைய தலைமுறை கண்ட தொலைக்காட்சியை பதிவிட்டு அதனை கருப்பு - வெள்ளை படமாக சித்தரித்து இருக்கிறது. அதனைத்தொடர்ந்து, தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்போது நாம் பெற்றிருக்கும் ஸ்மார்ட்போனையும் பதிவிட்டு தனது குடியரசுதின வாழ்த்துக்கள் பதிவு செய்துள்ளது.